அமெரிக்க லாட்டரி உலகில் மிகப்பெரிய ஜாக்பாட்
- 160 கோடி டாலர் பரிசுக்கு அதிபதி யார்?
(இலங்கை ரூபாவில் 160,0000000 X 174.12)
அமெரிக்காவில் 2
டாலருக்கு ஒரு அதிர்ஷடசாலி வாங்கிய ஸ்பெஷல் மெகாபால் லாட்டரி சீட்டுக்கு 160 கோடி டாலர் பரிசு கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள மெகா மில்லியன்ஸ் நிறுவனம் ஸ்பெஷல் மெகா பால் லாட்டரி சீட்டுகளை இந்த மாதம் விற்பனை செய்தது. இன்றிரவு அங்கு நடந்த குலுக்கலில் 5, 28, 62, 65, 70, 5 என்ற எண்ணுக்கு இந்த ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளது.
தெற்கு கரோலினாவில் விற்பனையான இந்த பரிசு சீட்டுக்கான உரிமையாளர் யார்? என்று இன்னும் தெரியவில்லை.
பரிசுக்குரிய நபருக்கு 91 கோடியே 30 லட்சம் டாலர்கள் முதல் தவணையாக அளிக்கப்படும். மீதியுள்ள தொகை 29 ஆண்டுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.
கடந்த ஜூலை மாதத்தில் இருந்து யாரும் பரிசுக்குரிய சரியான எண்ணை குறிப்பிட்டு லாட்டரி சீட்டு வாங்காததால் சிறுகச்சிறுக சேர்ந்திருந்த ஜாக்பாட் பரிசுத்தொகை தற்போது 160 கோடி டாலர்கள் அளவுக்கு குவிந்துள்ளது. அமெரிக்க லாட்டரி உலகில் இதுதான் மிகப்பெரிய பரிசு குலுக்கலாக கருதப்படுகிறது.
கடந்த 2016-ம் ஆண்டில் 150 கோடியே 86 லட்சம் டாலர்கள் கொண்ட பவர்பால் ஜாக்பாட் தொகையை இதுவரை மூன்று அதிர்ஷ்டசாலிகள் சரிசமமாக பகிர்ந்து கொண்டதுதான் அமெரிக்க வரலாறில் மிகப்பெரிய பரிசாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment