கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை உயரும்
2018 ஒக்டோபர் 07ஆம் திகதி மாலை
வரையான காலப்பகுதியில்
களுத்துறையிலிருந்து காலி மற்றும்
ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு
அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை (இது
கரைக்கு வரும்
அலைகளின் உயரம்
அல்ல) மேலெழும்பக்
கூடிய சாத்தியம்
காணப்படுவதுடன் கடற்பரப்புகளில் அலைகள் கரையை அடைதற்கான
சிறிதளவான சாத்தியம்
காணப்படுகின்றது.
வளிமணடலவியல்
திணைக்களம் நேற்று நண்பகல் வெளியிட்டுள்ள வானிலை
அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின்
மேற்கு, தென்மேற்கு மற்றும்
தெற்கு கடற்பரப்புகளில்
அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய
மழையோ பெய்யக்
கூடிய சாத்தியம்
காணப்படுகின்றது.
நாட்டைச்
சூழவுள்ள ஏனைய
கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது
இடியுடன் கூடிய
மழையோ பெய்யக்
கூடிய சாத்தியம்
காணப்படுகின்றது.
மன்னாரிலிருந்து
புத்தளம், கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக
ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில்
பலத்த மழைவீழ்ச்சி
அல்லது இடியுடன்
கூடிய மழைவீழ்ச்சி
எதிர்பார்க்கப்படுகின்றது.
பெந்தோட்டையிலிருந்து
காலி மற்றும்
ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு
அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து
வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர்
வரை காணப்படும்.
இக் கடற்பரப்புகளில்
காற்றின் வேகமானது
அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ
மீற்றர் வரை
அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில்
கடல் ஓரளவு
கொந்தளிப்பாகக் காணப்படும்
நாட்டைச்
சூழவுள்ள கடற்பரப்புகளில்
காற்றானது மாறுபட்ட
திசைகளிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு
15-25 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
இடியுடன்
கூடிய மழை
பெய்யும் நேரங்களில்
கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன்
அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்
என்றும் அநத
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment