2018.10.02 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்
அமைச்சரவை தீர்மானங்கள்



01. அரச முதலீட்டை வகுக்கும் நடைமுறையை முறையாக முன்னெடுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 06 ஆவது விடயம்)
2025 ஆம் ஆண்டளவில் பொருளாதார ரீதியில் வளர்ச்சி கண்ட நவீன சமூகம் ஒன்றை உருவாக்குவதற்காக அரசாங்கத்தின் நோக்கத்திற்கு அமைவான முக்கியத்துவத்தின் அடிப்படையில் செயல்திறன் மிக்க அரச முதலீட்டை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதற்கமைவாக அரச நிறுவனத்தின் மூலம் திட்டங்களை அடையாங்காணுதல் திட்டமிடல் தெரிவு செய்தல் மற்றும் அந்தத் திட்ட்ங்களுக்கான தேவைகளுக்கு அனுமதியை வழங்கும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய மூலோபாய வழிமுறைகளை அரசாங்க நிறுவனங்களுக்கு வழங்குதல். இதற்காக கொள்கை மற்றும் பொருளாதா அமைசசர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. விமான நிலையம் மற்றும் விமான சேவை (இலங்கை) நிறுவனத்தினால் வழங்கப்படும் சேவைக்காக அறவிடப்படும் வெளிநாட்டுப் பணத்தை செயற்பாட்டு முறையின் கீழ் மேற்கொள்ளுதல். (நிகழ்ச்சி நிரலில் 08 ஆவது விடயம்)
விமான நிலையம் மற்றும் விமான சேவை (இலங்கை நிறுவனத்தினால்) தமது சேவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவைக்காக அறவிடப்படும் ரூபாவுக்கு பதிலாக வெளிநாட்டு நாணயத்தை பயன்படுத்தி மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குவதன் மூலம் பெற்றுக் கொள்ளக் கூடிய பயன்மிக்க நிலமையைக் கருத்தில் கொண்டு இதற்காக தற்பொழுது உள்ள சில நாணயத்தை கட்டுப்படுத்தலுக்கான வரையறையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. சர்வதேச விமான சேவை நடவடிக்கையின் போது சட்ட விரோத செயற்பாடுகளை தடுப்பதற்கான திருத்த சட்ட மூலமொன்றை முன்னெடுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 09 ஆவது விடயம்)
சர்வதேச சிவில் விமான சேவைகள் தொடர்பில் சட்ட விரோத செயற்பாடுகளை தடுப்பது தொடர்பாக இதற்கு முன்னர் எட்டப்பட்ட மொன்றியல் இணக்கப்பாட்டு மற்றும் சர்வதேச சிவி;ல் விமான வான்வழி சேவையை வழங்கும் விமான நிலையங்களில் சட்ட விரோத வன்முறை செயற்பாடுகளை தடுப்பதற்கான அடிப்படை சட்ட உடன்படிக்கை என்ற சர்வதேச இணக்கப்பாட்டை தொடர்ந்தும் காலத்திற்கு ஏற்றவகையில் நடைமுறைப்படுத்தும் வகையில் தற்போது உள்ள 1996 ஆம் ஆண்டில் இலக்கம் 31 இன் கீழான சிவில் விமான சேவைகளின் பாதுகாப்புக்கு எதிரான சட்ட விரோத செயற்பாடுகளை தடுக்கும் சட்டத்துக்கு பதிலாக புதிய திருத்த சட்டமூலமொன்றை மேற்கொள்ளுமாறு சட்ட வரைபுக்கு ஆலோசனை வழங்கப்படவுள்ளது. இதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் சமர்ப்பிதத ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா (Enterprise Sri Lanka ) என்ற நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் வசதிகளை விரிவுபடுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 10 ஆவது விடயம்)
என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா ( Enterprise Sri Lanka ) வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் நிவாரண கடன் பரிந்துறை நடைமுறைகளில் பயன்கள் தற்பொழுது தொழில் நுட்பத்துறையில் ஈடுபட்டுள்ள தேசிய தொழில் தகுதி (NVQ) 5, 6, 7 மற்றும் 7 தரங்களை பூர்த்தி செய்துள்ள தொழில்துறையினர் சிறிய அளவிலான கால்நடை நிர்வாகப் பிரிவுகளில் ஈடுபட்டுள்ளோர் உக்கிப்போகும் பொருட்களைப் பயன்படுத்தி பல்வேறு பொருட்களை தயாரிப்பவர்களுக்கும் சிறுவர் பராமரிப்பு மத்திய நிலையங்களை ஆரம்பிப்பதற்கு தேவையான ஆலோசனைகளை எதிர்பார்த்துள்ளோர்களுக்கும் பெற்றுக்கொள்ளும் வகையில் விரிவுபடுத்தப்படவுள்ளது. இதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத் திட்டத்தின் கீழ் தயாரிப்பு திட்ட வடிவமைப்பு பொறியிலாளர் நிறுவனத்துக்கான நிவாரண கடன் பரிந்துரை முறை (நிகழ்ச்சி நிரலில் 11 ஆவது விடயம்)
தயாரிப்பு திட்ட வடிவடைப்பை மேற்கொள்ளும் பொறியியல் துறையில ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு உள்ளுர் மற்றும் சர்வதேச தயாரிப்பு திட்டமிடல், முன்மாதிரி மற்றும் வணிக நடவடிக்கையை மேற்கொள்வதற்காக நீண்டகால நிவாரண உடன்படிக்கையுடனான கடன் வசதியை என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத் திட்டத்தின் கீழ் வழங்கக்கூடிய முறையைக் கண்டறிந்து அதற்கமைவாக செயற்படுவதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்து. இதற்கமைவாக இயந்திர இலத்திரனியல் விஙஞ்ஞானத்தின் மூலம் ஊக்குவிக்கப்படக்கூடிய பொருளாதார அபிவிருத்திக்கு நிதி உதவியை வழங்கும் நிறுவனத்துக்கு நிவாரணத்தை வழங்கக்கூடிய வகையில் புதிய கடன் ஆலோசனையொன்றை நடைமுறைப்படுத்;துவதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
06. உலக வங்கி ஒத்துழைப்பு அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்புக்கான சர்வதேச வங்கி மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் ஆகிய நிறுவனங்களில் பொதுவான மற்றும் சாதகமான முதலீட்டை மேம்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தின் ஆதரவை தெரிவித்தல். (நிகழ்ச்சி நிரலில் 13 ஆவது விடயம்)
உலக வங்கி ஒத்துழைப்பின் மூலமான அபிவிருத்தி அபிலாஷைகளை மேலும் வெற்றிகரமாகவும் நிலையான வகையில் அடையும் வகையில் முன்னெடுப்பதற்காக இந்த ஒத்துழைப்புக்குள் மேற்கொள்ளக்கூடிய மறுசீரமைப்புக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்கமைவாக இந்த நிறுவனத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நிறுவனங்களில் பொதுவான முதலீடு மற்றும் சாதகமான முதலீட்டை மேம்படுத்துதல், இவற்றுக்குள் தக்கவைத்துக்கொள்ளக்கூடிய வருமானத்தை பங்காக மேற்கொள்ளுதல் முதலான செயற்பாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்குதல் மற்றும் தேவையான கொடுப்பனவை மேற்கொள்வதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. நில்வலா எளிய மாத்தறை மாவட்ட அபிவிருத்தி திட்டம் 2018 – 2020 வரை (நிகழ்;ச்சி நிரலில் 14 ஆவது விடயம்)
மாத்தறை மாவட்டத்தில் விசேடமாக முக்கிய நகரங்களுக்கு அப்பால் உள்ள பிரதேசங்களில் மேற்கொள்ளக்கூடியதென அடையாளம் காணப்பட்டுள்ள கல்வி, சுகாதாரம், பெருந்தெருக்கள், நீர்ப்பாசனம். பொதுவசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக 2018 தொடக்கம் 2020 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில நடைமுறைப்படுத்தக்கூடிய உத்தேச நில்வலா எளிய திட்டத்துக்கு நிதி உதவி வழங்கப்படவுள்ளது. இதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. அரசாங்கத்தின் நிதி அறிக்கைகள் நடைமுறையில் உள்ள அடிப்படையின் கீழ் ஒழுங்குப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 15 ஆவது விடயம்)
தற்பொழுது மேம்படுத்தப்படவுள்ள நிதி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அரசாங்கத்தின் கணக்கு அந்த நடைமுறைக்கு பதிலாக கட்ட நடைமுறை ஒன்றின் கீழ் ஒழுங்குபடுத்தல் அடிப்படைக்கு பரிமாற்றுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கு முறைக்கு உட்பட்டதான வகையில் இலங்கையின் நிதி கூற்று ஒழுங்குபடுத்தல் அடிப்படையில் முன்னெடுப்பதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. விஞ்ஞான அடிப்படையிலும் தொழில்நுட்ப ஆய்வு தொhடர்பிலும் மக்கள் சீன குடியரசின் விஞ்ஞான அக்கடமியுடன் ஏற்படுத்தப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை (நிகழ்ச்சி நிரலில் 19 ஆவது விடயம்)
இயற்கை சமுத்திரம், பூகோலம் சுற்றாடல் மற்றும் ஏனைய விஞ்ஞான துறைகளில் விஞ்ஞான ரீதியிலும் தொமழில்நுட்ப ஆய்வு நடவடிக்கைகளில் தொடர்பில் அந்நியோன்ய புரிந்துணர்வு தொடர்பிலும் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இருநாடுகளுக்கும் இடையில் விஞ்ஞான அடிப்படையில் ஆய்வு மற்றும் தொழில் நுட்ப அபிவிரு;த்தியை மேம்படுத்துவதற்கு இதன் மூலம் கிட்டும் உதவிகளை கவனத்தில் கொண்டு இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுவதற்காக விஞ்ஞான தொழில் நுட்ப ஆய்வு திறனாற்றல் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி மற்றும் மலையக மரபுரிமை தொடர்பான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10.உக்ரேன் மற்றும் இலங்கைக்கிடையில் இராஜதந்திர சேவை மற்றும் கடமைகளுக்கான கடவுச்சீட்டு உரிய நபர்களுக்கு விசா அனுமதியைப் பெற்றுக் கொள்வதிலிருந்து விடுவித்தல் (நிகழ்ச்சி நிரலில் 24 ஆவது விடயம்)
அரச இராஜதந்திர சேவை மற்றும் கடமைகளுக்கான கடவுச்சீட்டு உள்ள இலங்கையர்களுக்கும் உக்ரேன் பிரஜைகளுக்கும் இருநாடுகளுக்கிடையில் பயணங்களை மேற்கொள்ளும் போது விசா அனுமதியைப் பெற்றுக் கொள்வதிலிருந்து விடுவிப்பதற்காக இரு நாடுகளுக்கிடையில் உடன்படிக்கை எட்டப்படவுள்ளது. இதற்காக உள்நாட்டு அலுவல்கள் வட மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ். பி. நாவின்ன அவர்கள் சர்ப்பித்த ஆவணத்துக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11.இரத்தினபுரி குமார வித்தியாலயத்திற்கு காணியைப் பெற்றுக் கொடுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 25 ஆவது விடயம்)
இரத்தினபுரி குமார வித்தியாலயத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தேவைக்காக அடையாளம் காணப்பட்டுள்ள இரத்தினபுரி நகரத்திலுள்ள காணி ஒன்றை இந்த வித்தியாலயத்திற்கு வழற்குவதற்காக மாநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. 2018 சிறுபோகத்தில் நெல்லுக்காக நிர்ணயிக்கப்பட்ட விலை முறை (நிகழ்ச்சி நிரலில் 29 ஆவது விடயம்)
அரிசி;க்காக நியாயமான சந்தை விலையொன்றை முன்னெடுப்பதன் மூலம் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணத்தை வழங்கும் நோக்கில் இம்முறை சிறு போகத்தில் விவசாயி ஒருவரிடமிருந்து ஆகக் கூடியவகையில்' 5000 கிலோ வரையிலான நெல்லை கொள்வனவு செய்வதற்காக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களும் அபிவிருத்தி மூலலோபய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சருமான மலிக் சமரவிக்கிரம அவர்களும் கூட்டாக சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13.திரவ இயற்கை எரிவாயு மின்னிலையம் ஒன்றை அம்பாந்தோட்டை பிரதேசத்தில் நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 33 ஆவது விடயம்)
திரவ இயற்கை எரிவாயு மூலம் செயல்படக்கூடிய 400 மெகா வோல்ட் மின் அழுத்தத்தைக் கொண்ட மின் உற்பத்தி நிலையம் ஒன்று சீன அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்க்கிடையில் கூட்டுத் திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை இதற்கு முன்னர் அனுமதி வழங்கியிருந்தது. இதற்கமைவாக இந்தத் திட்டம் சிங்கப்பூரில் ஏற்படுத்தப்பட்டுள்ள அம்பாந்தோட்டை (Hambantota Power Private limited) மற்றும் இலங்கை மின்சார சபைக்கிடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்காக மின் சக்தி மற்றும் துப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. இலங்கை பொலிஸில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு உயர் கல்வி வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக தேசிய மட்டத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 36 ஆவது விடயம்)
இலங்கை பொலிஸில் உள்ள அதிகாரிகள் உயர் கல்வி வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக தேசிய மட்டத்திலான பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பது தொடர்பி;ல் சம்பந்தப்பட்ட துறையில் சீர்த்தியை தெரிவிக்கும் குழுவின் சிபாரிசுடன் எண்ணக்கரு ஆவணம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணக்கரு ஆவணத்தை கவனத்தில் கொண்டு உத்தேச பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்காக திருத்த சட்டமூலம் ஒன்று தயாரிக்கப்படவுள்ளது. இதற்காக கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் மற்றும் சட்டம் சமாதானம் தொடர்பான அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களும் கூட்டாக முன்வைத்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. வடக்கு கிழக்கு வடமத்திய மற்றும் ஊவா மாகாண பிரதேசங்களில் அபிவிருத்திக்கு உதவக்கூடிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 46 ஆவது விடயம்)
வடக்கு, கிழக்கு. வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அனைத்து உள்ளுராட்சி மன்ற பிரதேங்களை உள்ளடக்கிய வகையில் அவற்றில் அடிப்படை வசதிகள் மற்றும் நிறுவனங்களில் ஆற்றல்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட உள்ளுராட்சி மன்றங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பிரதேச அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட பிரதேச 134 உள்ளுராட்சி மன்றங்களில் மேலும் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்தத் திட்டத்திக்காக உலக வங்கியின் பங்களிப்பை 70 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிரித்துக்கொள்வதற்காக மாகாண சபைகள் உள்ளுராட்சி மன்றம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. ருஹூணு பொருளாதார அபிவிருத்தி கூட்டுத்தானத்தை அமைப்பதற்கான திருத்த சட்டமூலம (நிகழ்ச்சி நிரலில் 49 ஆவது விடயம்)
தெற்கு பிரதேசத்தில் ஏற்றுமதி முன்னுரிமை விசேட பொருளாதார வலையத்தை அமைப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி தெற்கு பிரதேசத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக . ருஹூணு பொருளாதார அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு தேவையான திருத்த சட்டமூலத்தை தயாரிப்பதற்காக திருத்த சட்ட மூலம் தயாரிப்புக்கு தேவையான ஆலோசனையை வழற்குவதற்காக இளைஞர் அலுவல்கள் திட்ட முகாமைத்துவம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
17. தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் பிட்டபெத்தர தொழில் பயிற்சி நிலையத்தை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 50 ஆவது விடயம்)
சிறந்த உணவு பேக்கரி தயாரிப்பு மோட்டார், தொழில் துறையினர், மற்றும் அழங்கார ஆகிய துறைகளுக்கான தேசிய தொழில் தகுதி (NVQ) – 4 மட்டத்தில் (கபொத (உயர்தர) தகுதிக்கு சமமான) கற்கை நெறியை மேற்கொள்ளக்கூடிய வகையில் தேவையான அடிப்படை வசதிகளுடனான தொழில் பயிற்சி மத்திய நிலையம் ஒன்று 200 மில்லியன் ரூபா செலவில் பிட்டபெத்தர என்ற இடத்தில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான நிதியை வழங்குவதற்காக இளைஞர் அலுவல்கள் தொழில் முகாமைத்துவம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18.இலங்கையில் இனத்தவர்கள் தொடர்பாக தற்போதைய நிகழ்;ச்சி ஒன்றை தயாரித்தல் (நிகழ்;ச்சி நிரலில் 51 ஆவது விடயம்)
இலங்கையில் வாழும் இனத்தவர்கள் தொடர்பாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழி அமைச்சில் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின் போது கண்டறியப்பட்ட விடயங்களை உள்ளடக்கி People of Sri Lanka என்ற பெயரில் நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பொது மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை மேம்படுத்தி சமாதானமிக்க நாடாக உருவாக்குவதற்காக நல்லிணக்கத்தைக்கொண்ட இனத்தவர் தொடர்பாக புரிந்துணர்வை மேம்படுத்தும் நோக்கில் இந்த நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்களை உள்ளடக்கி தற்போது திட்டமொன்றை தமிழ், சிங்கள, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் தயாரிப்பதற்காகவும் இதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காகவும் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழி அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் பிரிவில் ஏற்புத்திறனை மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 56 ஆவது விடயம்)
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் பிரிவில் தற்பொழுது உள்ள எற்புத்திறன் மூலம் 15 மில்லியன் பயணிகளுக்கான வசதிகளை செய்யக் கூடிய வகையில் அபிவிருத்திக்கான திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் பூர்த்தி அடையும் வரையில் பயணிகளுக்கு வசதிகளை செய்வதற்காக இடைக்கால முனையத்திற்கான Terminal கட்டம் ஒன்றை அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக இந்த இடைக்கால கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை பெறுகை மேல்முறையீட்டு சபையின் சிபாரிசுக்கு அமைய M/s China State construction Engineering Corporation Ltd.  என்றநிறுவனத்திற்கு வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20. ஸ்ரீ லங்கன் விமான சேவைக்காக வெளிநாடுகளில் விமானத்துக்கு எரிபொருளை பெற்றுக் கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 58 ஆவது விடயம்)
ஸ்ரீலங்கன் விமான சேவை கொண்டுள்ள விமானங்களுக்கு 24 விமான நிலையங்களில் விமானத்துக்கான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான பெறுகை அமைச்சரவை குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் பெறுகை குழுவின் சிபாரிசுக்கு அமைய 190.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை 11 விநியோகஸ்தர்களுக்கு வழங்குவதற்காக அரச தொழில்துறை மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
21. மொறட்டுவ லுனாவ வைத்தியசாலையை நவீனமயப்படுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 61 ஆவது விடயம்)
மொறட்டுவ லுனாவ வைத்தியசாலை மொறட்டுவப் பிரதேசத்தில் பொதுமக்களுக்கு சுகாதார சேவையை வழங்குவல் விசேட பணியை மேற்கொண்டு வருகிறது. இந்த வைத்தியசாலையை நவீன மயப்படுத்தும் திட்டத்தின் கீழ் வெளிநோயாளர் பிரிவு ஒன்றும் சிகிச்சை கட்டிடத் தொகுpதியொன்றையும் நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை விரைவாக மேற்கொள்வதற்காக 1035 மில்லியன் ரூபாவுக்கு பொறியியல் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனை செயலகம், பொறியியல் சேவை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனரத்த அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
22. கப்பல் மூலம் எடுத்துச்செல்லப்படும் கொள்கலன் மற்றும் பொருட்களை துரிதமாக அகற்றுவதற்கான வசதிகளை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 62 ஆவது விடயம்)
கப்பல் மூலம் எடுத்துச் செல்லப்படும் கொள்கலன மற்றும் பொருட்கள் உள்ளிட்டவற்றை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விரைவாக அகற்றும் பணியை மேற்கொள்ளும் வகையில் இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்துடன் அரச தனியார் கூட்டு நடவடிக்கையாக சுங்கப்பகுதியுடன் பிணைக்கப்பட்ட குதம் ஒன்றை அமைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு கேள்விப் பத்திரங்களை கோருவதற்காக விருப்பங்களை தெரிவிக்கும் தரப்பினருக்கு தளஆய்வுடனான கேள்விப்பத்திரத்தை சமர்ப்பிப்பதற்கான பரிந்துரைக்கு கோரிக்கையை விடுவிப்பதற்கு துறைமுகம் மற்றும் கப்பல் நடவடிக்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க அவர்கள் சர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
23. மேற்கு வலய இலகு ரயில் - திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துறைக்கான கோரிக்கையை விடுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 66 ஆவது விடயம்)
மிகவும் சிறந்த வசதி மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து சேவையை நிலை நிறுத்தும் நோக்கில் ராகமகடவத்தைகொழும்பு கோட்டை ஊடாக கிருலப்பனை வரையிலான 33 கிலோ மீட்டர் தூரத்தைக் கொண்ட 'ரக்தமார்கய' என்றும் களனிபொரளைநுகெகொடபிலியந்தலை ஊடாக மொரட்டுவை வரையிலான 28.3 கிலோ மீட்டர் தூரத்தைக் கொண்ட 'பசுமை வீதி' என்றும் மற்றும் உணுப்பிட்டிஅங்கொடகொஸ்வத்தை ஊடாக கொட்டாவை வரையிலான 22.3 கிலோ மீட்டர் தூரத்தைக் கொண்ட 'நீளமார்கய' என்ற பெயரில் இலகு ரயிலுக்கான மூன்று பாதைகளைக் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பரிந்துரைக்கான கோரிக்கையை விடுவிப்பதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
24. இலங்கை மின்சார சபையில் மின்சாரத்தை விநியோகிப்பதற்காக விநியோக வலைப் பின்னலை மேம்படுத்துவதற்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 68 ஆவது விடயம்)
இலங்கை மின்சார சபையின் விநியோக வலைப்பின்னலை மேம்படுததுவதற்கபக அதன் விநியோகம் மத்திய நிலையத்துக்கான மின்சார மின்மானி மற்றும் 25 ஆயிரம் மொடம் மற்றும் 75 ஆயிரம் மின்மாற்றிகளைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்வனவு குழுவின் சிபாரிசுக்கமைய முறையே சீனாவின் M/s Shenzeng Kailfa Technology  என்ற நிறுவனத்துக்கும் M/s Shenzhen Chauangin Co.ltd  என்ற நிறுவனத்துக்கும் வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
25. சப்புகஸ்கந்த அணல் மின் நிலையத்தில் பழைமையான 04 டர்போ சார்ஜர்சுக்குப் பதிலாக புதிய டர்போ சார்ஜர்களை பொருத்துவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
சப்புகஸ்கந்த அணல் மின்நிலையத்;தின் 4 பழைய டர்போ சார்ஜாரர்களுக்கு பதிலாக 4 புதிய டர்போ சார்ஜர்களை பொருத்துவதற்கான பெறுகை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுவை குழுவின் சிபாரிசுக்கு அமைய ஜேர்மனியைச் சேர்ந்த M/S Man Diesel & Turbo SE  என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
26.மின்சாரத்தை விநியோகிப்பதற்கு தேவையான ஏரியல் பண்டல் குறைகடத்திகளை கொள்வனவு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 70 ஆவது விடயம்)
இலங்கை மின்சார சபையின் இரண்டு விநியோக வலையத்துக்கு தேவையான 750 கிலோ மீட்டர் ஏரியல் பண்டல் குறைகடத்திகளை கொள்வனவு செய்வதற்காக பெறுகை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகைக் குழுவின் சிபாரிசுக்கு அமைய M/s Sierra Cable PLC என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் புதுப்பிககத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
27. நாவுல நகரம் உள்ளடங்கலாக கண்டி யாழ்ப்பாணம் -9 வீதியில் 53.74 கிலோ மீட்டர் தொடக்கம் 58 கிலோ மீட்டர் வரையிலான வீதியை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல்
இலங்கை தேசிய வீதி வலைப்பின்னலில் 144 கிலோ மீட்டர் அளவில் புனரமைப்பு மற்றும் மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் நாவுல நகரம் உள்ளடங்கலாக கண்டி, யாழ்ப்பாணம் (-9) வீதியில் 53.74 கிலோ மீட்டர் தொடக்கம் 58.00 கிலோ மீட்டர் வரையில் 4.26 கிலோ மீட்டர் வீதியைப் புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகைக்குரிய சிபாரிசுக்கு அமைய 590.62டி மில்லியன் ரூபாவுக்கு வழங்குவதற்காக Consulting Engineers & Contractors (Pvt) Ltd பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
28. கிராம பாலங்களை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 78 ஆவது விடயம்)
கிராம பிரதேசங்களில் போக்குவரத்து தொடர்புகளை மேம்படுததும் நோக்கில் அந்தப் பிரதேசங்களில் சுமார் 4000 பாலங்களை நிர்மாணிக்கும் தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்காக பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டு பரிந்துரைகள் அரசாங்கத்தினால் பாராட்டப்பட்டுள்ளது. இதற்கமைவாக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாட்டு குழுவின் சிபாரிசுக்கு அமைய 60 பாலங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் 17.12 மில்லியன் யுரோக்களுக்கு வட்டியற்ற தொகைக்கு பெல்ஜியம் Janson Bridging Belgium NV நிறுவனத்துக்கு வழங்குவதற்கும் மேலும் 200 பாலங்களை நிர்மானிப்பதற்கான ஒப்பந்தத்தை 50.68 மில்லியன் யூரோ வட்டியற்ற தொகைக்கு நெதர்லாந்தின் Janson Bridging Belgium NV நிறுவனத்துக்கு வழங்குவதற்கும் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசல் முஸ்தபா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
29. கடும் வறட்சி காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 80 ஆவது விடயம்)
கடும் வறட்சி காலநிலை காரணமாக உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாததனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்தும் நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைவாக வறட்சி காலநிலையின் காரணமாக தொடர்ச்சியாக மூன்று போகங்களில் உற்பத்தியை மேற்கொள்ள ழுடியபாமல் போன நெல் மற்றும் ஊடு உற்பத்தி மேற்கொள் முடியாத விவசாய குடும்பங்கள் வறட்சிகால நிலை காரணமாக தமது வாழ்வாதார வழிகளை இழந்த மற்றும் நன்னீர் கடற்றொழில் துறையில் ஈடுபட்டுள்ள குடும்பங்கள் விவசாய தொழிலாளர்கள் உள்ளடங்கலாக 4 இலட்சத்து 51 ஆயிரத்து 224 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பிதத ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
30. 2019 ஆண்டுக்கான பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாத நிகழ்ச்சி நிரல் (நிகழ்ச்சி நிரலில் 81 விடயம்)
2019 ஆம் ஆண்டு நிதியாண்டுகான பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்கு அமைய வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தல் (வரவு செலவு திட்ட உரை வரவு செலவு திட்ட இரண்டாவது உரையை வாசித்தல்) 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் திகதி மற்றும் அது தொடர்பான விவாதம் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரை மேற்கொள்வதற்கும் வரவு செலவு திட்ட குழுநிலை விவாதம் மற்றும் (வரவு செலவுத் திட்டம் மூன்றாம் முறை வாசித்தல்) நவம்பர் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நடத்துவதற்கும் பொருத்தமானதென கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
31. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மாதிரிக் கிராமங்களில் பயனாளிகளின் மேம்பாட்டுக்காக கிராம பாலங்களை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 86 ஆவது விடயம்)
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அடிப்படை வசதிகளைக் கொண்ட கிராமங்களில் ஆரம்பிக்கப்படும் மாதிரிக் கிராமங்களின் வீட்டு பயனாளிகளுக்கு நகர பொது வசதிகளுக்கு இலகுவாக சென்றடையக்கூடிய வகையில் கட்டுவன, படகஸ்ஸகிரம, ஓய ஊடான பாலம், அந்துகல கிரம ஆற ஊடாக தருன சேவா பாலம், கட்டுவன ஊறுபொக்க ஓய ஊடான கம்மலே கொட்டுபொல பாலம், கோஹாம்போரூவ மற்றும் சியாம்பலாம்முறைய. யாக்கெரேன, துந்தொல ஊடான பாலம், பெலியத்த கிரம ஓய ஊடான அங்குல்மடுவ. அரங்வெல வீதி பாலம், மற்றும் தங்கல்ல கந்துறுபொக்குன வீதி ஊடான பயணிகள் மேம்பாலம் உள்ளிட்ட ஆறு திட்டங்கள் நகமு புரவர வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ளது. இதற்காக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top