சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட
20,600 சிகரட்டுகளுடன்
காலி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் கைது
சட்டவிரோதமாக துபாயிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 103 பைக்கட் கொண்ட 20,600 சிகரட்டுகளுடன் நபரொருவர், கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து இன்று (07) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிகரட்டுகளின் பெறுமதி 10 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் காலி – வதுரம்ப பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment