தரம் ஐந்து புலமைப்பரிசில் தொகை 500 ரூபாவிலிருந்து
750 ரூபாயாக அதிகரிக்க நடவடிக்கை
தரம்
ஐந்து புலமைப்பரிசில்
பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களில், குறைந்த வருமானம்
பெறும் குடும்பங்களைச்
சேர்ந்த மாணவர்களுக்கு
இதுவரைக்காலம் வழங்கப்பட்டுவந்த, புலமைப்பரிசில்
தொகையை அதிகரிக்க,
அரசாங்கம் நடவடிக்கை
எடுத்துள்ளது.
இந்த
விடயம் தொடர்பில்,
கல்வி அமைச்சர்
அகிலவிராஜ் காரியவசத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட
அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைய,
இதுவரைக்காலம் மாதம் ஒன்றுக்கு ரூ.500
வழங்கப்பட்டுவந்ததுடன், இந்த தொகையை 750 ரூபாயாக
அதிகரிக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,
புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த, விசேட
தேவையுடைய 250 மாணவர்களுக்கு, புலமைப்பரிசில்
நிதியை வழங்குவதற்காக,
அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கும்
அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
0 comments:
Post a Comment