புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர்
நளின் பெரேரா நியமனம்
புதிய
பிரதம நீதியரசராக
உயர் நீதிமன்ற
நீதியரசர் நளின்
பெரேரா நேற்று
(12) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ
இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின்
முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
பிரதம
நீதியரசர் பிரசாத்
டெப் அப்பதவியிலிருந்து
ஓய்வு பெற்றதைத்
தொடர்ந்து ஏற்பட்ட
வெற்றிடத்திற்கே நளின் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதிபதியாக
நீதித்துறையில் இணைந்துகொண்டு படிப்படியாக பதவி உயர்வினை
பெற்ற நளின்
பெரேரா, பிரதம
நீதியரசராக நியமிக்கப்படுகின்றபோது உயர்
நீதிமன்ற நீதியரசராக
கடமையாற்றி வந்தார்.
பத்தரமுல்லவில்
நேற்று நடந்த
நிகழ்வு ஒன்றில்
உரையாற்றிய ஜனாதிபதி , இலங்கையின்
நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக
மிகவும் மூத்த,
அனுபவம்மிக்க உச்சநீதிமன்ற நீதியரசர் ஒருவர் தலைமை
நீதியசர் பதவிக்கு
தாம் முன்மொழிந்திருப்பதாக
கூறியிருந்தார்.
கடந்த
காலங்களில் தலைமை நீதியரசர் பதவிக்கு மூப்பு
அடிப்படையில் நியமனங்கள் மேற்கொள்ளப்படவில்லை
என்றும், அரசியல்,
தனிப்பட்ட அல்லது
கட்சி சார்ந்த
அடிப்படையிலேயே நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன
என்றும் அவர்
குறிப்பிட்டிருந்தார்.
சீஷெல்சில்
இருந்து நாடு
திரும்பிய பின்னர்,
தன்னைச் சந்தித்த
உச்சநீதிமன்ற நீதியரசர்கள், மிகவும் தகுதியான, மூத்த
நீதியரசர் ஒருவரை
ததலைமை நீதியரசராக
நியமிக்குமாறு கேட்டுக் கொண்டனர் என்றும் அவர்
கூறினார்.
அவ்வாறு
நியமிக்கப்படுவது தொழில்சார் நீதிபதிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்
என்றும் தெரிவித்தனர்.
அவ்வாறு சமர்ப்பிப்பட்ட
நீதியரசர்களின் பட்டியலில், 38 ஆண்டுகள்,
11 மாதங்கள் நீதித்துறையில் பணியாற்றியவரின்
பெயரையே நான்
தலைமை நீதியரசர்
பதவிக்கு முன்மொழிந்துள்ளேன்
என்றும்
அவர் கூறியிருந்தார்.
1977ஆம் ஆண்டு நீதிச்சேவைக்குள் நுழைந்த நீதியரசர் நளின் பெரேரா,
நீதிவானாக பணியாற்ற
ஆரம்பித்து, பின்னர்
மாவட்ட நீதிவானாக,
மேல் நீதிமன்ற
நீதிபதியாக, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக, பணியாற்றியவர்.
2016ஆம் ஆண்டில் இருந்து உச்சநீதிமன்ற
நீதியரசராக பணியாற்றிய வந்த நிலையிலேயே அவர்
தலைமை நீதியரசராக
நியமிக்கப்பட்டுள்ளார்.


0 comments:
Post a Comment