ஒலுவில் துறைமுகப் பிரதேத்தில்
காணப்படும் மண்ணை அகற்று!
கடலரிப்புக்கு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்திய
பின்னரே மணலை அகற்று!!
இருவேறுபட்ட ஆர்ப்பாட்டங்கள்
மண்ணால்
மூடப்பட்டு இருக்கும் ஒலுவில் துறைமுகப் பிரதேத்தில்
காணப்படும் மண்ணை தோன்றி மீனவர்களின் தொழிலுக்கு உதவுமாறு கோரி ஆழ்கடல் மீனவர்கள்
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்னால் வீதி மறியல் போராட்டம் நடத்துகின்றனர்
அட்டாளைசேனை
பிரதேச செயலகைம்
முன்பாக பிரதான
வீதியை முற்றாக
மறித்து, வீதிகளில் வள்ளங்களை
கொன்டுவந்து நிறுத்தி மிகப்பெரும்
போராட்டமாக தற்போது இப்போராட்டம் இடம்பெறுகிறது..!
இதேவேளை, மூன்றாவது
நாளாக தொடரும்
மண்ணை மீட்கும்
ஒலுவில் மக்களிள்
போராட்டம். தற்போது ஒலுவிலில் துறைமுக வாயிலின். ஒலுவில் கடற்கரைப்
பிரதேசத்தில் இடம்பெற்று வருகின்றது.
ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் கடலரிப்புக்கு நிரந்தரமான
தீர்வை ஏற்படுத்திய
பின்னரே, குறித்த
துறைமுகத்தில் மணலை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க
வேண்டும் எனவும்,
தற்போது மணலை
அகற்றுவதற்கான நடவடிக்கையை உடன் நிறுத்துமாறும் கோரிக்கை
விடுத்து ஒலுவில்
பிரதேசமக்கள் துறைமுக பிரதான நுளைவாயல் முன்பாக
மற்றுமொரு எதிர்ப்பு
ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒலுவில் துறைமுகப் பிரதேத்தில் மண்ணை அகற்றி
மீனவர்களின் தொழிலுக்கு உதவுங்கள் - மீனவர்கள்
கடலரிப்புக்கு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்திய
பின்னரே மணலை அகற்றுங்கள் - ஒலுவில் மக்கள்
0 comments:
Post a Comment