ரணிலை பதவியில் இருந்து விரட்டியது ஏன்?
உத்தியோகபூர்வமாக அறிவித்தார் ஜனாதிபதி
இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள்
இன்று வெளியிடப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் தேசிய பாதுகாப்பு, அரச வளங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தின் அடிப்படையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசியலமைப்பின் 42(4) சரத்திற்கு அமைய, இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் பிரதமராக தங்களை நியமித்த தான், தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய, உடன் அமுலுக்கு வரும் வகையில், பிரதமர் பதவியிலிருந்து தங்களை நீக்குவதாக இதனூடாக அறியத் தருகின்றேன் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ, பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment