ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் நுழைவாயிலை
மூடியுள்ள மணலை அகற்றுமாறு கோரி
படகுகளுடன் மீனவர்கள்
பிரதான வீதியில் இறங்கி போராட்டம்
ஒலுவில் மீன்பிடித்
துறைமுகத்தின் நுழைவாயிலை, கடந்த சில மாதங்களாக
மூடியுள்ள மணலை
அகற்றுமாறு கோரி, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு
முன்னால், மீனவர்கள்,
இன்று 8 ஆம் திகதி வீதிமறியல் போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
தத்தமது
மீன்பிடிப் படகுகளையும் பிரதான வீதியில்
போட்டு, கல்முனை
– அக்கரைப்பற்று வீதியை வழிமறித்து, காலை
7 மணிக்கு ஆரம்பித்த
இப்போராட்டம், நண்பகல் 12 மணி வரை நீடித்தது.
இதனால்,
போக்குவரத்து சில மணி நேரம்
தடைப்பட்டதோடு, பயணிகள் பல அளெகரியங்களை எதிர்கொண்டனர்.
இதனையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், நிலைமையைக்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கல்முனை
கரையோர மாவட்ட
மீன கூட்டுறவுச்
சங்கங்களின் சமாசம், அம்பாறை மாவட்ட ஆழ்கடல்
இயந்திரப் படகு
உரிமையாளர்கள் சங்கம் , கல்முனை மாவட்ட கடற்றொழில்
அமைப்பு என்பன
இணைந்து மேற்கொண்ட
இந்த வீதிமறியல்
போராட்டத்தில், கடற்றொழிலுக்கும் செல்லாது மீனவர்கள் போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
அம்பாறை
மாவட்ட மீனவர்களின்
பிரதான கடற்றொழில்
இறங்குதுறையாக, ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் காணப்படுகின்றது.
அத்துறைமுகத்தின் நுழைவாயில், கடந்த சில மாதங்களாக
மண்ணால் மூடப்பட்டுக்
காணப்படுவதால், மீனவ சமூகம் பாரிய பின்னடைவை
எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன்,
கடற்றொழில் நடவடிக்கைகளும் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளது என ஆழ்கடல்
இயந்திரப் படகு
உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம்
தொடர்பாக அம்பாறை
மாவட்டத்தின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின்
கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு, அதற்குத் தீர்வாக மணலை
அகழ்வதற்குக் கப்பல், துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தும்,
மணல் அகழ்வு
இடம்பெறவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதையடுத்து,
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத்
அலி தலைமையில்
நடைபெற்ற கலந்துரையாடலின்
போது, இதற்கு
நிரந்தரத் தீர்வு
வழங்கும் வரை,
தற்காலிகமாக மாற்று ஏற்பாடுகளைச் செய்வதாகவும் இப்போராட்டத்தைக்
கைவிடுமாறும் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
இதேவேளை,
கடந்த 6 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட, மண்ணை
மீட்கும் ஒலுவில் மக்களிள் கவனயீர்ப்புப் போராட்டம்,. தற்போது ஒலுவிலில்
துறைமுக வாயிலில் இடம்பெற்று வருகின்றது.
ஒலுவில்
துறைமுகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மணல் அகழ்வைத் தடுப்பதற்கும்,
அதனால் ஏற்படக்
கூடிய விளைவுகளுக்குத்
தீர்வு காண்பதற்குமான
கோரிக்கைகளை முன்வைத்து, துறைமுக நுழைவாயிலுக்கு முன்னால், ஆரம்பிக்கப்பட்ட இந்த கவனயீர்ப்புப் போராட்டம், மூன்றாவது நாளாக
தொடருகின்றது.
ஒலுவில்
பிரதேசத்தில் ஏற்பட்டு
வரும் கடலரிப்புக்கு
நிரந்தரமான தீர்வை ஏற்படுத்திய பின்னரே, குறித்த
துறைமுகத்தில் மணலை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க
வேண்டும் எனவும்,
தற்போது மணலை
அகற்றுவதற்கான நடவடிக்கையை உடன் நிறுத்துமாறும் கோரிக்கை
விடுத்து ஒலுவில்
பிரதேசமக்கள் மற்றுமொரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு
வருகின்றனர்.
0 comments:
Post a Comment