மோடியை சந்தித்தார் ரணில்
டெல்லியில் முக்கிய பேச்சுவார்த்தை
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் பயணமாக இந்தியா சென்றுள்ளார். தனது சுற்றுப்பயணத்தில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து பேசினார்.
இந்நிலையில், இன்று மதியம் பிரதமர் நரேந்திர மோடியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் வர்த்தகம், முதலீடு மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.
தன்னை கொலை செய்வதற்கு இந்திய உளவு அமைப்பான ‘ரா’ சதி செயலில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்ததாக செய்தி வெளியான நிலையில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.




0 comments:
Post a Comment