ஞானசாரருக்கு பொது மன்னிப்பு வழங்க கோரி
ஜனாதிபதிக்கு கடிதம்
பொதுபல
சேனா அமைப்பின்
பொதுச் செயலாளர்
கடகொலஅத்தே ஞானசார தேரரை, பொதுமன்னிப்பின் அடிப்படையில்
விடுதலை செய்யுமாறு,
கோட்டை கல்யாணி
சாமகிரி தர்ம
மஹா சங்க
சபையினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கோரிக்கை
அடங்கிய கடிமொன்று
கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொய்யான
சாட்சிகள் சமர்பிக்கப்பட்டு,
ஞானசார தேரருக்கு
இவ்வாறு தண்டனை
வழங்கப்பட்டிருப்பது பாரிய குற்றமாகும்
என, பிரதான
சங்க நா யக்க
தேரர் குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார தேரர் நீதிமன்றில் கருத்து வெளியிட்ட
போதிலும் அது எந்த வகையிலும் நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கில் செய்த காரியமல்ல எனவும்
கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ புலனாய்வாளர்களை தேவையற்ற வகையில் சிறையில் தடுத்து வைத்துள்ளமை
தொடர்பில் அஹிம்சையாக கொடுத்த கோரிக்கை எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment