நிதி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த
ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவர் விடுதலை
நிதி
மோசடி தொடர்பில்
குற்றம் சுமத்தப்பட்டிருந்த
முன்னாள் அமைச்சர்
ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ
உள்ளிட்ட 3 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த
வழக்கு குருணாகல்
மேல் நீதிமன்ற
நீதிபதி மேனகா
விஜேசுந்தர முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கைத்
தொடர்ந்து விசாரிப்பதற்கு
போதிய சாட்சி
இல்லாமை மற்றும்
வழக்கின் உறுதியற்ற
தன்மை காரணமாக
இவர்களை விடுதலை
செய்வதற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சதொச
நிறுவனத்திற்கு சொந்தமான 5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான
பணத்தை முறைகேடாக
பயன்படுத்தியதாக இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டு
கைது செய்யப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.



0 comments:
Post a Comment