அன்று அரசாங்கத்திற்கும் புலிகளுக்கு இடையில்
ஏற்படுத்தப்பட்ட ஒரு ஒப்பந்தம்!
இந்த ஒப்பந்தத்துக்கும் முஸ்லிம்களுக்கும்
என்ன சம்பந்தம் என்று கேட்பவர்களுக்கு..!!
இந்த ஒப்பந்தத்தில் முஸ்லிம்களுக்கு ஏதாவது அநியாயம் நடந்தால் யார் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது என்று குறிப்பிடப்படாத நிலையில், புலிகள் மூதூரிலும், வாழைச்சேனையிலும், கல்முனையிலும்,காத்தான்குடியிலும் முஸ்லிம்களின் உயிர் உடமைகளுக்கு அநியாயங்கள் செய்தபோது, ராணுவம் நமக்கு பாதுகாப்பு தர பகிரங்கமாகவே மறுத்திருந்தார்கள்.
குறிப்பாக வாழைச்சேனையில் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டு அவர்களினால் புதைக்கப்பட்டிருந்த இரண்டு மையத்துக்களை தோண்டி எடுத்து நல்லடக்கம் செய்யக் கொண்டுவந்தபோது, ராணுவம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அந்த மையத்துக்களை நடுரோட்டில் வைத்து பெற்றோல் ஊற்றி எறித்தார்கள் புலிகள். இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் எவ்வளவோ கேட்டும் ராணுவமும் பொலிசாரும் இந்த ஒப்பந்தத்தைக் காரணம்காட்டி புலிகளுக்கு எதிராக செயல்பட மறுத்து விட்டார்கள். இதற்கான காரணம் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும்தான் ஆயுதப்படை இருந்தது, அந்த ஆயுதப்படைகளுக்கும் அவர்கள் சார்ந்த இனத்துக்கும் இடையில் ஏதாவது பிரச்சினைகள் வந்தால் மட்டுமே அதனைக் கண்காணிக்க நோர்வே சமாதானக்குழு இங்கே ஈடுபட்டிருந்தது.
அதனால் முஸ்லிம்கள் பாதிக்கப்படும்போதும் அலறும் போதும் நோர்வே எம்மைக் கவணிக்கவில்லை. அதற்கு அவர்கள் சொன்ன காரணம் முஸ்லிம்களுக்கு ஏதாவது நடந்தால் என்ன செய்யவேண்டும் என்று எங்களுக்கு கூறப்படவில்லை என்பதாகும்.
அதனால்தான் கல்முனை நகரை புலிகள் அழிப்பதற்கு திட்டம்போடுவதை அறிந்து ஹரீஸ் எம்பி அவர்கள் கண்டியிலே ஒய்யாரமாக தூங்கிக் கொண்டிருந்த சாணக்கியத்தினூடாக, பாதுகாப்புக்காக பிரதமரிடம் இராணுவத்தை கேட்டபோது தர முடியாது என்று மறுத்துவிட்டார், அப்படி ராணுவம் வந்து புலிகளோடு சண்டைபிடித்தால் அது ஒப்பந்தத்தை மீறும் செயலாக மாறிவிடும் என்றும் கூறியவர்தான் பிரதமர் ரணில் அவர்கள்.
இப்படியான பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்தபோதுதான் சாணக்கியத்துக்கு இந்த ஒப்பந்தத்தின் தவறுகள் புரிய ஆரம்பித்தது. அதன் பின் சாணக்கியம் பிரதமர் ரணில் மூதூருக்கு வந்து இதற்கு பதில் சொல்லாதவரை நான் மூதூரைவிட்டு வெளியாகமாட்டேன் என்றுகூறி சத்தியாகிரகம் இருந்தார். மூன்று நாளாகியும் ரணில் வரவில்லை நிலைமையை புரிந்துகொண்ட சாணக்கியம் திருக்கோணமலை ஊடாக எஸ்கேப் ஆகிவிட்டார். அதன் பின் புலிகள் இயன்ற மட்டும் முஸ்லிம்களை குதறித்தள்ளினார்கள்.
அதனால்தான் சொல்லுகிறோம் இந்த ஒப்பந்தம் செய்யப்படும்போது ரணிலின் அரசாங்கத்தில் முக்கிய புள்ளியாக இருந்தது மட்டுமல்ல, முஸ்லிம்களின் தலைவன் என்ற அதிகாரத்தோடும் இருந்தார். அதனால்தான் இதையெல்லாம் கவணியாத தலைவனும் ஒரு தலைவனா என்று மனவேதனை அடைகிறோம் அவ்வளவுதான்..
-முனைமருதவன்♥-


0 comments:
Post a Comment