முன்னாள் சட்டமா அதிபர் ஷிப்லி அஸீஸ் காலமானார்
முன்னாள் சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஷிப்லி அஸீஸ் காலமானார்.
தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தனது 75 ஆவது வயதில் அவர் காலமானார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் முக்கிய பல பதவிகளை வகித்த ஜனாதிபதி சட்டத்தரணி ஷிப்லி அசீஸ், அரசியலமைப்பு சபையின் உறுப்பினராகவும் செயற்பட்டு வந்தார்.
சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எச்.ஏ. அஸீஸின் புதல்வரான ஷிப்லி அஸீஸ் பல ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.
காலஞ்சென்ற ஜனாதிபதி சட்டத்தரணி ஷிப்லி அஸீஸின் ஜனாஸா, ராஜகிரிய, லேக் வீதியிலுள்ள அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு மாலை 5.30 மணிக்கு ஜாவத்த முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment