ஜனாதிபதி இன்று இந்தியாவிற்கு பயணம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (28) நண்பகல் இந்தியாவிற்கான இரண்டு நாள் அரசமுறை விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தின்போது இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கவுள்ளதுடன், இந்திய பிரதமருடன் இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ஏனைய இந்திய பிரமுகர்கள் பலரை சந்திக்கவுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, திறைசேரி செயலாளர் சஜித் ஆட்டிகல, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார ஆகியோரும் ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.
அதேவேளை மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக கோத்தாபய ராஜபக்ச இன்று மாலை புதுடெல்லி வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாளை காலை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச முதலில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசவுள்ளார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் இலங்கை ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கப்படும். அத்துடன் மகாத்மா காந்தியின் நினைவிடத்திலும் அவர் அஞ்சலி செலுத்துவார்.
இதன் பின்னர் ஹைதராபாத் இல்லத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சந்தித்துப் பேசவுள்ளார். இதையடுத்து இரு நாடுகளின் தலைவர்களும் ஊடகங்களுக்கும் அறிக்கைகள் வெளியிடுவர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.