தமிழ்
மக்களோ முஸ்லிம் மக்களோ
இனவாதிகள்
அல்ல
பாதுகாப்பை
உறுதிப்படுத்த வேண்டும்!
தமிழ் மக்களோ முஸ்லிம் மக்களோ இனவாதிகள் அல்ல, அவர்கள் வாக்களித்ததும் ஒரு சிங்கள பௌத்த
ஜனாதிபதி வேட்பாளருக்கே. அவர்கள் இனவாதிகளாக இருந்திருந்தால் நிச்சயமாக தமிழர்கள்
சிவாஜிலிங்கத்திற்கும் முஸ்லிம்கள் ஹிஸ்புல்லாவிற்கும் வாக்களித்திருக்க வேண்டும்.
தேர்தல் தினத்தன்றும் தேர்தல் முடிவடைந்த பின்பும்
தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக புதிய
ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு குந்தகம் ஏற்படலாம். எனவே, இதற்கான உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக
எடுக்க வேண்டும்.
அதே நேரம் தமிழ் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ்
முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுகக்கான அபிவிருத்தி
அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இன்று (19)
கொழும்பில் நடைபெற்றது.
தமிழ் மக்களோ முஸ்லிம் மக்களோ இனவாதிகள் அல்ல, அவர்கள் வாக்களித்ததும் ஒரு சிங்கள பௌத்த
ஜனாதிபதி வேட்பாளருக்கே. அவர்கள் இனவாதிகளாக இருந்திருந்தால் நிச்சயமாக தமிழர்கள்
சிவாஜிலிங்கத்திற்கும் முஸ்லிம்கள் ஹிஸ்புல்லாவிற்கும் வாக்களித்திருக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் அளித்த அனைத்து வாக்குகளும் பௌத்த சிங்கள
வேட்பாளரான சஜித் பிரேமதாசவிற்கே. இதனை பெரும்பான்மை மக்கள் நன்கு புரிந்து கொள்ள
வேண்டும். எனவே, தமிழர்களோ
முஸ்லிம்களோ இந்த நாட்டில் இனவாதிகள் அல்ல. அவர்களும் இந்த நாட்டின் மீது
பற்றுள்ளவர்கள். அவர்களும் இந்த நாட்டை நேசிப்பவர்கள்.
தேர்தல் தினத்தன்று தெரணியகலை நூரி தோட்டத்தில் ஒரு சம்பவம்
இடம்பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து கடந்த 18 ஆம் திகதி அன்று யட்டியாந்தோட்டை கணேபொல
மேல்பிரிவில் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
இவ்வாறான செயற்பாடுகளால் இந்த ஜனாதிபதியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துமே
தவிர அவர் மீது நல்லென்னம் ஏற்படாது. எனவே, தமிழ் முஸ்லிம் மக்களின் மனதை
வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்ற மாகாண சபை தேர்தல்களில்
தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்கின்ற வகையில் செயற்பாடுகள்
முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தில் நேரடியாக அரசியல் தலைவர்கள்
சம்பந்தப்பட்டிருக்க மாட்டார்கள் என நான் நினைக்கின்றேன். ஆனாலும் தங்களுடைய
ஆதரவாளர்களை இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்பதை அவர்கள் அறிவுறுத்த
வேண்டும். எனவே தமிழ் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த
வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
0 comments:
Post a Comment