பாராளுமன்றத்தின்
எதிர்கால
நடவடிக்கைகள்
தொடர்பில்
சபாநாயகர்
அறிக்கை
புதிய ஜனாதிபதி பதவி ஏற்றதன் பின்னர் பாராளுமன்றத்தின்
எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட ஏனைய கட்சித் தலைவர்கள்
மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் சபாநாயருடன் கலந்துரையாடியதாக சபாநாயகர்
ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது மூன்று தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
1. அரசியலமைப்பின் பிரகாரம் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்து, ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு
இடமளித்தல்.
2. பாராளுமன்று உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 3/2 பெரும்பான்மையை பெற்று பாராளுமன்றத்தை கலைத்து
உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துதல்.
3. பிரதமர் தலைமையிலான அரசாங்கம் சுய
விருப்பத்துடன் பதவி விலகி, பாராளுமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடையும் வரையில் புதிய அமைச்சரவையை அமைக்க
இடமளித்தல்.
இந்த தீர்மானங்கள் தொடர்பில் பிரதமரும், எதிர்கட்சித் தலைவரும் தங்களது கட்சி
உறுப்பினர்களுடன் கலந்துரையாடி தீர்மானத்தை அறிவித்தவுடன், பாராளுமன்றத்தின் அனைத்து கட்சி
உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment