புதிய பிரதமர், அமைச்சரவை நியமனம்
நாளை வரை தாமதம்?



புதிய பிரதமர், மற்றும் அமைச்சரவை நியமனங்கள், நாளை வரை தாமதமாகக் கூடும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கிடையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதங்களினாலேயே, புதிய பிரதமர், அமைச்சரவை நியமனங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது,

நேற்று நடந்த ஐதேகவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், நாடாளுமன்றத்தை உடனடியாக கலைப்பதற்கு எதிர்க்கட்சிக்கு ஆதரவளிக்கும் விடயத்தில் இணக்கப்பாடு ஏற்படவில்லை.

எனினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க எந்த நேரத்திலும் பதவி விலகி புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிப்பதற்கு வழிவிடத் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

அதேவேளை, டிசெம்பர் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்து, மேற்பார்வை அரசின் கீழ் தேர்தலை நடத்த உத்தரவிடுவார் என்று மற்றொரு தகவல் கூறுகிறது.

மேற்பார்வை அமைச்சரவைக்கு, இடைக்காலப் பிரதமர் என்ற வகையில் மகிந்த ராஜபக்ச தலைமை வகிப்பார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top