நாட்டை நிர்வகிக்க முடியாத
சூழ்நிலை ஏற்பட்டால் மாத்திரமே
இராணுவம் ஈடுபடுத்தப்படும்



நாட்டை நிர்வகிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் மாத்திரமே இராணுவம் ஈடுபடுத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

மிஹிந்தலை ரஜமகா விகாரையின் விகாராதிபதியை தரிசித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், அரசியல் காரணங்களுக்காக ஏற்படும் மோதல்களை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top