அனுப்பி வைக்கப்பட்ட கடிதங்களுக்கு
சபாநாயகர் கரு ஜயசூரிய பதில்
எதிர்கட்சி தலைவர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்குமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் நாடாளுமன்ற சபாநாயகருக்கு எழுதிய கடிதம் தமக்கு கிடைக்கப் பெற்றதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரியவின் ஊடகப்பிரிவு இந்த தகலை வெளியிட்டுள்ளது.
அத்தோடு எதிர்கட்சி தலைவர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை நியமிக்குமாறு கோரி அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர் உறுப்பினர்கள் கையொப்பமிட்டு தமக்கு கடிதம் ஒன்று எழுதியிருப்பதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்
0 comments:
Post a Comment