கோத்தாபய ராஜபக்சவின்
பதவியேற்பு விழாவில்
வெளியேற்றப்பட்ட ஹிஸ்புல்லா
– ஐதேக அமைச்சர்களுக்கும் கூச்சல்
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் பதவியேற்பு விழாவுக்குச் சென்ற எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, உள்ளே அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். ஹிஸ்புல்லா நிகழ்வு நடைபெறும் இடத்துக்குள் நுழைந்த போது, அங்கிருந்த பொதுஜன பெரமுன ஆதரவாளர்களும் பௌத்த பிக்குகளும் கூச்சலிட்டு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இப்பதவியேற்பு
நிகழ்வுக்குச் சென்ற ஐதேக அமைச்சர்கள் பலருக்கும்
பொதுஜன பெரமுன
ஆதரவாளர்கள் கூச்சலிட்டு எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
அனுராதபுர-
ருவன்வெலிசய விகாரையில் துட்டகெமுனு சிலைக்கு முன்பாக
கோத்தாபய ராஜபக்ச
நேற்று ஜனாதிபதியாக
பதவியேற்றுக் கொண்டார்.
இந்த
நிகழ்வில் பிரதமர்
ரணில் விக்ரமசிங்க,
அமைச்சர்கள் ரவி கருணாநாயக்க, அர்ஜூன ரணதுங்க,
தயா கமகே,
ஜோன் அமரதுங்க
போன்றவர்கள் கலந்து கொண்டனர்.
அமைச்சர்கள்
ரவி கருணாநாயக்க,
அர்ஜூன ரணதுங்க,
தயா கமகே,
ஜோன் அமரதுங்க
ஆகியோர் நிகழ்வு
நடைபெறும் இடத்துக்குச்
சென்ற போது
அங்கு திரண்டிருந்த
பொதுஜன பெரமுன
ஆதரவாளர்கள் கூச்சலிட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர்..
அதேவேளை,
கோத்தாபய ராஜபக்சவின்
பதவியேற்பு விழாவுக்குச் சென்ற எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, உள்ளே
அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
அவருக்கு
அழைப்பு விடுக்கப்படவில்லை
என, பாதுகாப்பு
அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
ஹிஸ்புல்லா
நிகழ்வு நடைபெறும்
இடத்துக்குள் நுழைந்த போது, அங்கிருந்த பொதுஜன
பெரமுன ஆதரவாளர்களும்
பௌத்த பிக்குகளும் கூச்சலிட்டு
கடும் எதிர்ப்பை
வெளியிட்டனர்.
0 comments:
Post a Comment