இலங்கை மாணவனினால்
ஹெலி கொப்டர் தயாரிப்பு



இரத்தினபுரி குருவிற்ற மத்திய மஹா வித்தியாலயத்தை சேர்ந்த தருசிக்க திலங்க என்ற மாணவன் ஹெலி கொப்டர் ஒன்றை தயாரித்துள்ளார்.

இந்த வித்தியாலயத்தில் நடைபெறும் தொழில்நுட்ப தினத்திற்கு அமைவாக இடம்பெறும் கண்காட்சியை முன்னிட்டு இதனை தயாரித்துள்ளார்.

தமது தந்தையின் தொழிற்சாலையில் எறியப்படும் பொருட்களை பயன்படுத்தி 11 நாட்களில் இந்த ஹெலி கொப்டர் தயாரிக்கப்பட்டது. இதற்காக 250,000 ரூபா செலவாகியுள்ளது. இது ஒரு நபர் பயணிக்கக்கூடிய வகையிலும், 7 அடி உயரத்தைக் கொண்டதாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹெலி கொப்டர் பறப்பதற்கான ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்குவார்களாயின் இதனை முழுமைப்படுத்த முடியும் என்று ஹெலி கொப்டரை தாயாரித்த மாணவன் தெரிவித்துள்ளான்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top