பிரதமர் மஹிந்தவின் உடனடி உத்தரவால்
மீண்டும் தமிழ் மொழி சேர்க்கப்பட்டது!
தமிழ் மொழி அகற்றப்பட்டு சேதப்படுத்தப்பட்ட பெயர்ப்பலகை மீண்டும் தமிழுடன் மும்மொழிகளிலும் நிறுவப்பட்டுள்ளதாக பாணந்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் சில பகுதிகளில் தமிழ் மொழியில் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்ட இடங்களில் பலகைகள் சேதப்படுத்தப்பட்டதுடன், தமிழ்ப் பெயர்கள் அழிக்கப்பட்டிருந்தன.
இந்த விவகாரம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து வீதிகளில் காணப்படும் தமிழ் பெயர்ப் பலகைகளை சேதப்படுத்துவோரை கைது செய்யுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டிருந்தார்.
பாணந்துறை நகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியிலுள்ள வீதி ஒன்றின் பெயர்ப்பலகையிலும் தமிழ் மொழி அகற்றப்பட்டு சேதமாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச பொலிஸ் மற்றும் அதிகாரிகளுக்கு விடுத்த கடுமையான உத்தரவிற்கமைவாக மீண்டும் உடனடியாக தமிழுடன் மும்மொழிகளிலும் நிறுவப்பட்டுள்ளது.
குறித்த நாசகார வேலைகளில் ஈடுபட்டுவரும் நபர்கள் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment