கோத்தபாயவின் பதவியேற்பு நிகழ்வுக்கு சென்ற
ஹிஸ்புல்லா திருப்பி அனுப்பட்ட விவகாரம்!
கலாநிதி வசந்த பண்டாரவின் கோரிக்கை
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள அனுராதபுரம் சென்ற ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லா திருப்பி அனுப்பப்பட்டதை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் உறுப்பினர் கலாநிதி வசந்த பண்டார இவ்வாறு தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“பதவியேற்பு நிகழ்விற்கு வந்திருந்த ஹிஸ்புல்லாவை நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா திருப்பியனுப்பியது போன்று ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயற்பட வேண்டும்.
அவ்வாறு இருந்தால், தேவையற்ற விதத்தில் தலையிட வருபவர்களை ஒதுக்கி வைக்க முடியுமாக இருக்கும்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் பதவியேற்பு நிகழ்வு அநுராதபுரத்தில் நேற்று முன் தினம் இடம்பெற்றிருந்தது. இதல் அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
எனினும், இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா நிகழ்வில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment