சிறுபான்மையினரிடம் இருந்து
எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை
புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள
கோத்தாபய ராஜபக்ஸ தெரிவிப்பு



சிறுபான்மையினரும் இந்த வெற்றியின் பங்குதாரர்களாக வேண்டும் என  அழைத்தேன். ஆனால் அதற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்று  புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அனுராதபுரருவன்வெலிசய ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

முற்பகல் 11.56 மணியளவில், உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், ஜனாதிபதியாகப் பதவியேற்கும் உறுதியுரையைப் படிக்க ஆரம்பித்த கோத்தாபய ராஜபக்ச, 11.56 மணியளவில் உறுதியுரையில் கையெழுத்திட்டார்.

இதையடுத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

சிங்கள மக்களுடைய வாக்குகளால் மட்டும் என்னால் வெற்றிபெற முடியும் என எனக்குத் தெரிந்திருந்தது.

ஆனால், சிறுபான்மையினரும் இந்த வெற்றியின் பங்குதாரர்களாகவேண்டும் என நான் அவர்களை அழைத்தேன். ஆனால் அதற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

இலங்கை நடுநிலையான அணிசேரா நாடாகவே இருக்கும், அனைத்துலக சக்திகளுக்கிடையிலான விவகாரங்களில் எந்தவொரு பக்கமும் சார்ந்து செயற்படாதுஎன்றும் குறிப்பிட்டார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top