ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின்
உத்தியோகபூர்வ இலச்சினை
ஜனாதிபதி
கோட்டாபய ராஜபக்ஸ
தனது உத்தியோகபூர்வ இலச்சினையை வெளியிட்டுள்ளார்.
கோட்டாபய
ராஜபக்ஸ கொண்டுள்ள நிர்வாக
கட்டமைப்பை முன்னிலைப்படுத்தி இந்த இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது. இது ஒரு புதிய
அரசியல் கலாசாரத்தை
அறிமுகப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்
நான்கு மூலைகளும்
பௌத்தம் மற்றும்
தேசத்தின் செல்வாக்கைக்
குறிக்கின்றன. இது மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய
உத்தனா சம்பதா,
ஆரக்கா சம்பதா,
கல்யாண சம்பதா
மற்றும் சாம
ஜீவிதா ஆகிய
நான்கு பௌத்த
சிந்தனைகளை சித்தரிக்கின்றன.
நான்கு
மூலைகளிலும் உள்ள நான்கு குறியீடுகள் சர்வதேச
உறவுகளையும் விருந்தோம்பலையும் குறிக்கின்றன.
ஆரஞ்சு நிறம்
தமிழ் மக்களையும்,
பச்சை நிறம்
முஸ்லிம் சமூகத்தையும்
குறிக்கின்றன. நான்கு அடி அகலமுள்ள வெள்ளைக்
கோடுகள் அனைத்து
திசைகளின் பாதுகாப்பையும்
குறிக்கின்றன.
இதில்
உள்ள சமமான
மஞ்சள் நிறம்
இனங்களுக்கிடையில் ஐக்கியம், சமாதானம்
மற்றும் அன்னியோன்னிய
புரிந்துணர்வை முன்னெடுத்து வாழ்க்கை அமைய வேண்டும்
என்பதை வெளிப்படுத்துவதாக
அமைந்துள்ளன
0 comments:
Post a Comment