ஐசிசி
ஒருநாள் கிரிக்கெட் அணி தரவரிசை
இந்தியா
114 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றது
ஆஸ்திரேலிய
அணி ஜிம்பாவே அணியிடம் 31 ஆண்டுகளுக்கு பிறகு தோல்வி அடைந்தது. இதன் எதிரொலியாக ,முதல்
இடம் வகித்து வந்த ஆஸ்திரேலிய அணி தனது இடத்தை இந்தியாவுக்கு தாரைவார்த்துள்ளது.
இங்கிலாந்துக்கு
எதிரான டெஸ்ட்
போட்டியில் இந்திய அணி மோசமாக ஆடி
டெஸ்ட் தொடரை
இழந்தாலும். ஒருநாள் கிரிக்கெட் தொடரில்
அபாரமாக இந்திய
அணி விளையாடி வருகிறது.
இதன்மூலம் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்
அணி தரவரிசையில்
முதலிடம் என்ற
அரியணையில் மீண்டும் ஏறி இருக்கிறது.
ஐசிசி
வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் 114 புள்ளிகள் பெற்று
இந்தியா முதலிடத்திலும்
113 புள்ளிகள் பெற்று தென் ஆப்பிரிக்கா இரண்டாம்
இடத்திலும் 111 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் 111 புள்ளிகள் பெற்று சிறிலங்கா
நான்காவது இடத்திலும் உள்ளன. முதல் இடத்தில்
இருந்த ஆஸ்திரேலிய
அணி மூன்றாம்
இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த வாரத்தில் இன்னும்
ஐந்து ஒருநாள்
கிரிக்கெட் போட்டிகள் இருப்பதால் முடிவுகளை பொறுத்து
தரவரிசைப்பட்டியலில் மாற்றம் வரலாம்.
முதலிடத்தை
இந்தியா தக்க
வைத்து கொள்ள
வேண்டுமெனில் இங்கிலாந்துக்கு எதிராக உள்ள ஏனைய
இரு போட்டிகளிலும்
வெற்றி பெறவேண்டும்.
அதேவேளையில், தென் ஆப்ரிக்காவை ஆஸ்திரேலியா
அணி வெற்றி பெறவேண்டும்
0 comments:
Post a Comment