பாகிஸ்தான் அரசுக்கு
சொந்தமான தொலைக்காட்சி சூறையாடப்பட்ட விவகாரம்:
இம்ரான்கான் மதகுரு தாஹீருல் காத்ரி மீது
வழக்கு பதிவு
இம்ரான்கான் மதகுரு தாஹீருல் காத்ரி மீது
வழக்கு பதிவு
பாகிஸ்தானின்
அரசு தொலைக்காட்சி
நிறுவனம் சூறையாடப்பட்ட
விவகாரத்தில் இம்ரான் கான் மற்றும் மதகுரு
தாஹீல் உல்
கத்ரி மீது
வழக்கு பதிவு
செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இன்று
காலை போரட்டக்காரர்கள்,
பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி நிறுவனத்திற்குள்
புகுந்தனர். அங்கு கமராக்கள் மற்றும் பொருட்களை
அடித்து உடைத்தனர்.
இதனால் ஒளிபரப்பு
நிறுத்தப்பட்டது. உடனடியாக அங்கு இராணுவம் வரவழைக்கபட்டது.
இதை தொடர்ந்து
போராட்டகாரர்கள் டெலிவிஷன் அலுவலகத்தை விட்டு வெளியேறினார்கள்.
இதைதொடந்து சில நிமிடங்கள் பிடிவியின் ஒளிபரப்பு தடைபட்டது. இராணுவம் தலையிட்டதை தொடர்ந்து மீண்டும் ஒளிபரப்பு தொடங்கியது.
இந்த நிலையில், தொலைக்காட்சி நிறுவனம் சூறையாடப்பட்ட விவகாரத்தில் இம்ரான் கான் மற்றும் மதகுரு தாஹீருல் காத்ரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை தலைமை செயலக பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.
இம்ரான் கான் மற்றும் தாஹிருல் காத்ரி உள்ளிட்டோர் மீது பாகிஸ்தானில் எழுதப்பட்ட ஒப்பந்தத்தை மீறியதாக அவர்கள் மீது பயங்கரவாத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.