கல்முனைக்குடி ஜும்மா
பள்ளிவாசலின்
சுற்றுமதில்
கட்டுமான பணிக்கு வழங்கப்பட்ட
நீதிமன்ற
இடைக்கால தடையுத்தரவு நீக்கம்.
”வாகன தரிப்பிடம்
அமைக்கப்படுமாயின் பள்ளிவாசலின் பழைய மதில் இருக்கும் இடத்தில் இரும்புதூண்கள் மற்றும்,சங்கிலிகள்
மூலம் மறிக்கப்பட்டு தொழுகை நேரங்கள் மற்றும் பள்ளிவாசல் நிகழ்வுகள் சம்மந்தமான நேரங்களில்
மாத்திரம் சங்கிலிகள் அவில்கப்பட்டு மற்றைய நேரங்களில் சங்கிலிகளால் மூடப்பட்டு இருக்க
வேண்டும்””
கல்முனைக்குடி
ஜும்ஆ பள்ளிவாசல் சுற்றுமதில் கட்டுமான பணிக்கு வழங்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவு
இன்று கல்முனை மாவட்ட நீதிமன்றத்தினால் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது
இன்று
01.09.2014 திங்கட்கிழமை குறித்த வழக்கு
விசாரணைகள் சுமார் 3மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக நடைப்பெற்றது
இறுதியில்
நீதிமன்றமானது கட்டாணையை இடை நிறுத்தியதோடு,வாகன
தரிப்பிடம் அமைக்கப்படுமாயின் பள்ளிவாசலின்
பழையமதில் இருக்கும்
இடத்தில் இரும்புதூண்கள்
மற்றும்,சங்கிலிகள்
மூலம் மறிக்கப்பட்டு
தொழுகை நேரங்கள்
மற்றும் பள்ளிவாசல்
நிகழ்வுகள் சம்மந்தமான நேரங்களில் மாத்திரம் சங்கிலிகள்
அவில்கப்பட்டு மற்றைய நேரங்களில் சங்கிலிகளால் மூடப்படு
இருக்க வேண்டும்
என் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்றமானது
இந்த வேலைத்திட்டம்
நிறைவடையும் போது நேரடியாக வந்து பார்வையிட்டு
அதன்பின் குறித்த
வழக்கு தள்ளுபடி
செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment