பாகிஸ்தான் பிரதமர் பதவி விலக இராணுவத் தளபதி அறிவுறுத்தல்
நவாஸ் பதவி விலக மாட்டார் என
பாகிஸ்தான் அரசு விளக்கம்
பாகிஸ்தான்
அரசுக்கு எதிரான
போராட்டம் தீவீரமடைந்துள்ளதையடுத்து
இராணுவத்தளபதியின் அறியுறுத்தல்படி அந்நாட்டு
பிரதமர் நவாஸ்
ஷெரீப் பதவி
விலக உள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.
நவாஸ் ஷெரீப்
பதவி விலகக்
கோரி இஸ்லாமாபாத்தில்
இம்ரான் கானின்
பாகிஸ்தான் தெறிக்கி இம்சாப் கட்சினர் மற்றும்
தாயிருள் காஜரியின்
ஆதரவாளர்கள் நடத்தி வரும் போராட்டம் நாளுக்கு
நாள் தீவிரமடைகிறது.
போராட்டக்காரர்கள்
திடீரென தலைமைச்
செயலகம் மற்றும்
அரசு தொலைக்காட்சி
அலுவலகத்திற்குள் தடையை மீறி நுழைந்ததால் அவர்களை
இராணுவத்தினர் தடுக்க முயன்றனர். அப்போது இரு
தரப்பிற்கும் இடையே கடும் மோதல் வெடித்தது.
பிரதமர் நவாஸ்
ஷெரீப் பதவி
விலக நெருக்கடி
அதிகரித்துள்ள நிலையில் அநாட்டு இராணுவ தளபதி
ரஹீல் ஷெரீப்
நவாஸை சந்தித்து
பேசியுள்ளார்.
தேர்தல் முறைகேடு குறித்த விசாரணை குறித்த விசாரணை முடியும் வரை பிரதமர் பதவிலிருந்து ஒதுங்கி இருக்கும் படி இராணுவ தளபதி கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதனை ஏற்று பதவி விலகுவது தொடர்பாக நவாஸ் ஷெரீப் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ள அரசு, நவாஸ் ஷெரீப் பதவி விலக மாட்டார் என மீண்டும் தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இம்ரான் கான் மீது தீவிரவாத தடுப்புச் சட்டப்படி வழக்கு பதிவு செய்யவும் பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இஸ்லாமாபாத் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment