மும்பை புதுமுக நடிகை தூக்குப்போட்டு தற்கொலை
உருக்கமான கடிதம் பொலிஸாரிடம் சிக்கியது

மும்பை வெர்சோவாவில் புதுமுக நடிகை மோனா கன்னா(வயது28).  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதிய உருக்கமான  கடிதம் பொலிஸாரிடம் சிக்கியுள்ளது.
மும்பை வெர்சோவா யாரிரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில்  மோனா கன்னா வசித்து வந்தார். புதுமுக நடிகையான இவர்   தி ஹான்டடு ஹவுஸ்என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். இவர் நடித்த மற்றொரு படமானதி லாஸ்ட் ஹாரர் என்ற படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
மோனா கன்னாவின் பெற்றோர் இறந்துவிட்டனர். மோனா கன்னா தனது தங்கை ரியாவுடன் வசித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ரியாவை அருகில் உள்ள மார்க்கெட்டிற்கு சென்று காய்கறி வாங்கி வருமாறு மோனா கன்னா அனுப்பி வைத்துள்ளார். காய்கறி வாங்கிவிட்டு ரியா வீட்டிற்கு திரும்பி வந்தபோது, மோனா கன்னாவின் அறைக்கதவு மூடி இருந்ததை கண்ட அவர், அறையில் மோனா கன்னா தூங்கிக்கொண்டிருக்கலாம் என கருதி இருந்துவிட்டார்.
இரவு சாப்பிடுவதற்கும் மோனா கன்னா வரவில்லை. மறுநாள் காலை வெகுநேரமாகியும் மோனா கன்னா அறை கதவை திறக்கவில்லை. இதனால் ரியாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனையடுத்து மோனா கன்னாவின் அறைக்கதவை தங்கை ரியா தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. உள்ளே இருந்து எந்த சத்தமும் வரவில்லை. இதையடுத்து ரியா தன்னிடம் இந்த மற்றொரு சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, அறையில் உள்ள மின்விசிறியில் மோனா கன்னா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரியா கதறி அழுதார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த வெர்சோவா பொலிஸார் விரைந்து வந்து மோனா கன்னாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது..
பொலிஸ் விசாரணையில் நடிகை மோனா கன்னா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தற்கொலைக்கு முன் அவர் தனது ஐபேடில் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் பொலிஸாரிடம் சிக்கியுள்ளது. அதில், ‘என்னுடைய இந்த விபரீத முடிவுக்கு யாரும் காரணம் இல்லை. எனவே என் இறப்பு தொடர்பாக யாரிடமும் விசாரணை நடத்த வேண்டாம். நன்கு சிந்தித்தே இந்த முடிவை எடுத்துள்ளேன். எனது தங்கையை மிகவும் நேசிக்கிறேன்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
 மோனா கன்னாவின் தற்கொலை குறித்து அவரது தங்கை ரியா கூறுகையில், ‘‘மோனா கன்னாவை பிரபல நடிகர் ஒருவரின் மகன் காதலித்து வந்தார். அவர் மோனா கன்னாவை காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி புறக்கணித்து விட்டார். மோனா கன்னா அவரை சந்திக்க சென்ற போது தகாத வார்த்தைகளால் திட்டியும், அடித்து, உதைத்துள்ளார். சம்பவத்தன்று மாலை கூட அவரை மோனா கன்னா சந்தித்தார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது மிகுந்த மனஉளைச்சலில் காணப்பட்டார். அதன்பிறகே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இதற்கு அந்த நடிகரின் மகனே காரணம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் மோனா கன்னாவை காதலித்த அந்த பிரபல நடிகரின் மகனின் பெயரை கூற அவர் மறுத்து விட்டார். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top