சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையின்

அடைவு மட்டம் எங்கே உள்ளது..??

(துறையூர் .கே மிஸ்பாஹுல் ஹக்)

சில காலங்கள் முன்பு மிகவும் தூர்ந்து போன நிலையில் காணப்பட்ட சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையானது தற்பொழுது படிப்படியாக தனது வளர்ச்சிப் படியில் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் முன்னேற்றம் கண்டு வருகிறது.
இங்கே முன்னேற்றம் கண்டு வருகிறது என்பது சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையின் முந்திய நிலையுடன் இன்றைய நிலையை ஒப்பிடும் போதே தவிர ஏனைய அண்டைய ஊர் வைத்திய சாலைகளுடன் ஒப்பிடும் போது சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையின் வளர்ச்சியை ஒரு பொருட்டாக கூட கணக்கு எடுக்க முடியாது என்பதே உண்மை.
இன்னும் பல்வேறு அபிவிருத்திகளையும்,தேவைகளையும் உணர்ந்த வண்ணமே சம்மாந்துறை ஆதார வைத்திய சாலை உள்ளது என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் சம்மாந்துறை வைத்திய சாலையின் ஒரு விடயத்தை கோடிட்டுக் காட்டுவதன் மூலம் சம்மாந்துறை வைத்திய சாலையானது எங்கே?உள்ளது என்பதை மட்டிட்டுக் கொள்ளுங்கள்.
"இன்னும் சம்மாந்துறை வைத்திய சாலையில் மாத்திரைகள் தாளிற்குள் மடித்தே வழங்கப்படுகிறது."
இது ஒரு ஆதார வைத்திய சாலைக்கு அழகல்ல.
இக் காலத்தில் வேறு எங்கும் இதனைக் காண முடியாது.மேலும்,இது சுகாதாரத்திற்கும் அவ்வளவு உகந்தது அல்ல.சாதாரணமாக நாட்டு வைத்தியரிடம் சென்றால் கூட இன்று அழகிய முறையில் பக்கட்டினுள் வைத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது.இவ்வாறு நிலைமை இருக்க,ஒரு ஆதார வைத்திய சாலை இவ்வாறு இருப்பது அவ் வைத்திய சாலையின் மிகவும் நலிவடைந்த போக்கையே சுட்டி நிற்கிறது.
இவ் விடயமானது ஏனையோரிடம் சம்மாந்துறை பற்றி எள்ளி நகையாட வழி சமைத்துக் கொடுத்திருக்கிறது.
சம்மாந்துறையில் பாராளுமன்ற உறுப்பினராகும் தகுதி தனக்குள்ளது எனக் கூறிக்கொள்ளும் 10 இற்கும் மேற்பட்ட அரசியல் வாதிகள் உள்ளனர்(இதில் பணத்தை முன்னிலைப் படுத்தி தேர்தல் கேட்க விளைபவர்களும் உள்ளனர்).மாகாண சபை சுகாதாரஅமைச்சர் உட்பட 2 மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளனர்.ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இனைப்பாளர் பிரதேச சபைத் தவிசாளராகவும் உள்ளார்.
இவர்களில் யாராவது ஒருவர் இன் நிலைமையை இல்லா தொழிக்க முயற்சிப்பார்களா..??
அரசாங்கத்திடம் இருந்தோ அல்லது உங்கள் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்தோ அல்லது NGO களைப் பயன்படுத்தி அல்லது நீங்கள் அறிந்த வேறு இதர வழிகளைப்பயன்படுத்தி இதனை செய்து தருமாறு மக்கள் சார்பாய் கேட்டுக் கொள்கிறேன்.
மக்களே!
யாவற்றையும் அரசியல் வாதிகள் தான் செய்ய வேண்டும் என்று அல்ல.எம் ஊர்களில் உள்ள முக்கிய புள்ளிகள் சிலர் முயற்சித்தால் கூட சில NGO களைப் பிடித்துச் செய்ய முடியும்.வசதி படைத்தோர் பலர் இவ் விடயத்தில் முகம் கொண்டாலும் இதனை ஓரளவு நிவர்த்திக்க இயலுமாகவும் இருக்கும்.மக்கள் உதவியுடன் இச் சேவையை முன்னெடுக்கும் வைத்திய சாலையும் நான் அறிந்தவரை எம் பகுதியில் உள்ளது என்பது இங்கே மேலும் ஓர் முக்கிய விடயமாகும்.தயவு செய்து இவ் விடயத்தில் சற்று கரிசனை எடுத்து சம்மாந்துறை மண்ணிற்கு இவ் விடயத்தல் ஏற்படும் அவமானத்தை இல்லாதொழிக்க முயற்சிப்போமாக..




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top