மர்ஹும் எம்.எம்.எம்.ஜலீல் ஆசிரியருக்காக
கல்முனை ஸாஹிறா தேசியக் கல்லூரியில் (துஆப்) பிரார்த்தனை


கல்முனை ஸாஹிறா தேசியக்கல்லூரியில் கடந்த இரண்டு தசாப்தங்களாக கல்விப் பணி புரிந்த சிரேஸ்ட ஆசிரியர் மர்ஹும் எம்.எம்.எம்.ஜலீல் அண்மையில் இறையடி சேர்ந்தமைக்காக அன்னாருக்காக கல்லூரி அதிபர் , பிரதி அதிபர்கள் , உதவி அதிபர்கள் , பகுதித்தலைவர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் இன்று 2014.09.01 ஆம் திகதி திங்கள்கிழமை  விசேட காலைக்கூட்டத்தின் போது துஆப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
கல்முனை ஸாஹிறா தேசியக் கல்லூரியில்  விஞ்ஞான ஆசிரியராக இணைந்து கொண்ட இவர் சிறந்த ஆசானாக , பகுதித் தலைவராக , ஒழுக்காற்று சபை தலைவராக , பாடசாலை அபிவிருத்திச் சங்க பொருளாளராக  , ஹட்டன் நஷனல் வங்கி பாடசாலைக் கிளை பொறுப்பாளராக , இணைப்பாடவிதான பொறுப்பாசிரியராக , விஞ்ஞான கழக தலைவராக , உதவி அதிபராக என்று கல்லூரி வாழ்ககையில் பல பதவிகளை வகித்தததுடன் அவற்றை மிகவும் திறமையாக வழி நடத்தியிருந்தார்.
1957 ஆம் ஆண்டு பிறந்த இவர் சென்ற மாதம் ( ஆகஸ்ட்) 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
யா அல்லாஹ் அன்னாரின் பிழைகளைப் பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் 

எனும் சொர்க்கம் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போமாக.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top