ட்விட்டர்
ஊழியர்ககளை தாக்கப்போவதாக
ஐ.எஸ்.ஐ.எஸ்
போராளிகள் எச்சரிக்கை
அமெரிக்காவில்
உள்ள ட்விட்டர்
அலுவலக ஊழியர்கள்
ஸ்லீப்பர் செல்கள்
மூலம் படுகொலை
செய்யப்படுவார்கள் என்று ஐ.எஸ்.ஐ.எஸ் எச்சரிக்கை
விடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள
ட்விட்டர் அலுவலக
ஊழியர்கள் மீது
'ஓநாய் தாக்குதல்'
நடத்தப்படும் என்று ஐ.எஸ்.ஐ.எஸ் தனது
ட்விட்டர் பக்கத்தில்
தெரிவித்ததாக செய்தி வெளியானது. ட்விட்டர் நிர்வாகத்துக்கு
தக்க பதிலடி
கொடுக்க வேண்டிய
நேரம் வந்துவிட்டது.
ஓநாய் தாக்குதல்
நடத்தி அவர்களின்
ஊழியர்களை படுகொலை
செய்ய வேண்டும்
அல்லது மாற்றுத்
திறனாளிகளாக மாற்ற வேண்டும்.
இந்தப்
பணியை அமெரிக்கா
மற்றும் ஐரோப்பா
அலுவலகங்களில் உள்ள நமது ஸ்லீப்பர் செல்கள்
நிறைவேற்றுவார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்து.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ ட்விட்டர் அலுவலகத்தில்
பணிபுரியும் ஒவ்வொரு ஊழியரும் அவர்களது நிறுவன
வாசலில் ஓநாய்
தாக்குதல் நடத்த
தற்கொலைப்படை வீரர் ஒருவர் காத்துக்கொண்டு இருக்கிறார்
என்பதை மனதில்
வைத்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.இதனிடையே ஐ.எஸ்.ஐ.எஸ்-ன் இந்த மிரட்டல்
ட்வீட்டுகளை அந்த நிறுவனம் நீக்கியுள்ளது. அதேபோல
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு தொடர்புடையவர்களாக
கருதப்படும் பலரின் பக்கங்களை நீக்குவதற்கு ட்விட்டர்
நிறுவனம் நடவடிக்கை
எடுத்துள்ளது எனவும் அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment