11 வருடங்களுக்குப்
பின்னர் சாய்ந்தமருது எல்லையிலுள்ள
வரவேற்புத் தோரணத்தில் எழுதப்பட்டிருக்கும்
கல்முனை மாநகரசபை
உங்களை அன்புடன் வரவேற்கின்றது
- சாய்ந்தமருது
கடந்த 11 வருடங்களாக இவ் வரவேற்புத் தோரணம் இவ்வாறுதான் காட்சி தந்தது. |
சாய்ந்தமருது
எல்லையிலுள்ள நுழை வாயிலில் பல இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக்கும்
‘வரவேற்புத் தோரணம்” அதில் எந்த ஒரு வாசகமும் எழுதப்படாமல் அப்படியே 10 வருடங்களாக
எதுவித தீர்வும் இன்றி விடப்பட்டிருப்பது குறித்து இப்பிரதேச புத்திஜீவிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சாய்ந்தமருதிலுள்ள
இவ்வரவேற்புத் தோரணம் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் அழைப்பின்
பேரில் கடந்த 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் திகதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களால்
திறந்து வைக்கப்பட்டது.
எது
எப்படியிருப்பினும் இவ் வரவேற்பு தோரணத்தை அழகுபடுத்தி வரவேற்பு வாசகத்தை எழுதும் முடிவை
கல்முனை மாநகர சபை சீக்கிரம் எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோள் இப்பிரதேச மக்களால் விடுக்கப்படுகின்றது.
மக்கள்
விருப்பம் 2014.05.29 வெளியிட்ட செய்தி
கல்முனை
மாநகர சபைக்குட்பட்ட
சாய்ந்தமருது நகரின் தென் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள
வரவேற்பு கோபுரத்தை
புனரமைப்பு செய்து- அதில் உரிய வாசகத்தை
பொறிப்பதற்கு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்முனை மாநகர
முதல்வர் சட்டத்தரணி
எம்.நிஸாம்
காரியப்பர் சபையில் அறிவித்துள்ளார்.
கல்முனை
மாநகர சபையின்
மாதாந்த சபை
அமர்வு நேற்று
செவ்வாய்க்கிழமை முதல்வர் நிஸாம் காரியப்பர் தலைமையில்
இடம்பெற்றபோது மாநகர சபையின் முன்னாள் பிரதி
முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான ஏ.ஏ.பஷீர் இவ்விடயத்தை
பிரஸ்தாபித்து உரையாற்றினார்.
"கல்முனை மாநகரின் நுழைவாயிலான சாய்ந்தமருது
நகரின் தெற்குப்
பகுதியில் வரவேற்புக்
கோபுரம் அமைக்கப்பட்டு
பல வருடங்களாகியும்
அதில் இன்னும்
வாசகம் எதுவும்
பொறிக்கப்படவில்லை. அது மாத்திரமல்லாமல்
அந்தக் கோபுரம்
தற்போது பாழடைந்த
வீட்டைப்போல் மிகவும் அசிங்கமாக காட்சியளிக்கிறது.
இதைப்
பார்க்கின்ற போது நாம் ஒரு மாநகருக்குள்
நுழைகின்றோமா அல்லது வேறு எங்காவது போகின்றோமா
என்று மக்கள்
கேட்கின்ற அளவுக்கு
அந்த கோபுரம்
மிகவும் அவல
நிலையில் காணப்படுகிறது"
என்று உறுப்பினர்
பஷீர் சுட்டிக்காட்டினார்.
ஆகையினால்
இனியும் காலம்
தாழ்த்தாமல் இதன் புனரமைப்புப் பணியையும் வாசகம்
பொறிக்கும் வேலையையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்
என்று வலியுறுத்திக்
கேட்டுக் கொள்கின்றேன்"
என்றும் அவர்
வேண்டுகோள் விடுத்தார்.
இதற்குப்
பதிலளித்த முதல்வர்
நிசாம் காரியப்பர்;
இது தொடர்பில்
உரிய நடவடிக்கை
எடுப்பதற்கு மாநகர சபை தயாராக இருக்கிறது.
அதில் பொறிக்க
வேண்டிய வாசகம்
என்ன என்பதை
சாய்ந்தமருது உறுப்பினர்கள் தீர்க்கமாக முடிவெடுக்க வேண்டும்.
"சாய்ந்தமருது மக்கள் அன்புடன்
வரவேற்கின்றனர்; கல்முனை மாநகர சபை" என்று
எழுதுவது பொருத்தம்
என சுட்டிக்காட்டப்படுகிறது.
அதனை உறுப்பினர்கள்
பரிசீலித்து தீர்மானியுங்கள். அதனைத் தொடர்ந்து மாநகர
சபையினால் அவ்வாசகத்தை
எழுதும் பணியை
மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம்"
என்று முதல்வர்
குறிப்பிட்டார்.
கல்முனை
முன்னாள் மேயரான சிராஸ் மீராசாகிபின் விளக்கம்:-
சாய்ந்தமருது
எல்லையில் அமைக்கப்பட்டுள்ள
வரவேற்பு வளைவில்
“சாய்ந்தமருது உங்களை வரவேற்கிறது“ என்ற வாசகம்
பொறிக்கப்படாமை தொடர்பில் கல்முனை முன்னாள் மேயரான
சிராஸ் மீராசாகிப்
பின்வரும் விளக்கம்
ஒன்றினை வழங்கியிருந்தார்.
2012 ஆம் ஆண்டு ஜுன் அல்லது ஜுலை மாதம் சாய்ந்தமருது
எல்லையிலுள்ள வரவேற்பு வளைவில் ” கல்முனை மாநகர
சபை உங்களை
வரவேற்கிறது – சாய்ந்தமருது” என்ற வாசகம் பொறிப்பதற்கான
தீர்மானம் ஒன்று
மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து
குறித்த வரவேற்பு
வளைவுக்கு வர்ணமிட்டு
புனரமைத்து மேற்சொன்ன வாசகத்தையும் இட்டுத் தருவது
தொடர்பிலும் அதற்கான செலவுகளை ஏற்றுக் கொள்ளுமாறும்
கல்முனை அமானா
வங்கியுடன் நாம் வேண்டுகோள் விடுத்து அதற்கான
செலவு திட்ட,
அறிக்கை ஒன்றினையும்
கையளித்திருந்தோம். இதற்கான முழுச்
செலவாக சுமார்
இரண்டு இலட்சம்
ரூபா என
கணிப்பிட்டு அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.
இருப்பினும்
அமானா வங்கி
இது தொடர்பில்
காலம் கடத்திக்
கொண்டிருந்தது. இந்த நிலையில் எனது பதவிக்
காலமும் பறிக்கப்பட்டதால்
இந்த விடயத்தை
செய்து முடிக்க
முடியாத நிலை
ஏற்பட்டது. இவ்வாறு சிராஸ் மீராசாகிப் தெரிவித்திருந்தார்.
0 comments:
Post a Comment