தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் அளிக்குமாறு அதில் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேசமயம், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் ஜாமீன் கோரி மனு எதுவும் வழங்கப்படவில்லை என அறிவிக்கப்படுகின்றது. உச்சநீதிமன்ற பதிவாளர் ஜெனரலிடம் ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை அதிமுக வக்கீல்கள் இன்று தாக்கல் செய்தனர்.

இந்த மனுவில், எனக்கு 66 வயதாகிறது. எனக்கு பல உடல் உபாதைகள் உள்ளன. எனக்கு பெங்களூர் தனி நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. என்னால் குறைந்தது அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோர முடியாத நிலை உள்ளது. எனவே நான் ஒரு பெண் என்பதையும், எனது உடல் நிலையையும் கருத்தில் கொண்டு எனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும். பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் எனக்கு விதித்துள்ள தண்டனையையும் நிறுத்தி வைத்து உத்தரவிட வேண்டும் என்று ஜெயலலிதா கோரியுள்ளார். இந்த மனு நாளை அல்லது செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வரலாம் என்று தெரிகிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top