இன்று கரையைக் கடக்கிறது
ஹுட்ஹுட் புயல்
உயர் அதிகாரிகளுடன்
இந்தியப் பிரதமர் ஆலோசனை
வங்கக்
கடலில் நிலை
கொண்டுள்ள அதி
தீவிர புயலான
"ஹுட்ஹுட்' புயல் இன்று ஞாயிற்றுக்கிழமை
மதியம் இந்தியாவிலுள்ள
ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம், ஒடிஸாவின் கோபல்பூர் இடையே கரையைக்
கடக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
புயல்
கரையைக் கடக்கும்போது
195 கி.மீ.
வேகத்தில் பலத்த
காற்று வீசும்
என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,
ஆந்திரத்தில் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 1.50 லட்சம்
பேரும், ஒடிஸாவில்
3.50 லட்சம் பேருமாக மொத்தம் 5 லட்சம் பேர்
வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
என அறிவிக்கப்படுகின்றது.
இந்த
புயல் காரணமாக
ஒடிசாவில் அடுத்த
இரண்டும் மூன்று
நாட்களுக்கு ஓடிசாவில் கன மழை பெய்ய
வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியப்
பிரதமர் நரேந்திர
மோடி டில்லியில்
உயர்மட்ட அதிகாரிகளுடன்
ஆலோசனை நடத்தினார்.
இந்த அலோசனை
கூட்டத்தில் அமைச்சரவை செயலாளர் அஜித் சேத்,
பிரதமரின் முதன்மை
செயலாளர், உள்துறை
மற்றும் பாதுகாப்பு
அமைச்சின் செயலாளர்கள்,
வானிலை ஆய்வு
மையத்தின் உயரதிகாரிகள்
மற்றும் பிரதமர்
அலுவலக அதிகாரிகள்
கலந்து கொண்டனர்.
கடலோர நகரங்களில்
எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
குறித்தும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள்
தொடர்பான நடவடிக்கைகள்
குறித்தும் பிரதமர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும்
புயல் தாக்கும்
மாநிலங்களுடன் தொடர்பில் இருக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர்
அறிவுறுத்தியுள்ளார்என இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment