வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்
மீண்டும் பொது நிகழ்ச்சியில் தோன்றினார்

பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமால் 40 நாட்களுக்கும்  மேலாக வெளியே வராமல் இருந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், வீட்டு அமைப்பு திட்டம் ஒன்றில் நேற்று கலந்து கொண்டு உடல் நிலை மற்றும் அதிகாரம் குறித்து எழுப்பட்ட  ஊகங்களுக்கு முற்றுப்புள்ளிவைத்தார் என்று அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கொரியாவடகொரியா, தென்கொரியா என 1948–ஆம் ஆண்டு பிளவுபட்டது முதல், வடகொரியாவில் ஒரு குடும்ப ஆட்சியே நடைபெறுகிறது. முதலில் கிம் இல் சுங் ஆட்சி செய்து வந்தார். 46 ஆண்டு காலம் அவர் ஆண்டார். அவருக்கு பின்னர் அவரது மகன் கிம் ஜாங் இல் 1994–ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார். அவர் 17 ஆண்டு காலம் ஆட்சி நடத்தினார்.
அவரது மரணத்துக்கு பின்னர் அவரது மகன் கிம் ஜாங் அன் (வயது 31) 2011–ஆம் ஆண்டு டிசம்பர் 19–ஆம் திகதி ஆட்சிக்கு வந்தார்.இந்தக் குடும்பம் வடகொரியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தினாலும், மக்கள் அவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்.இந்த நிலையில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் இப்போது பொது நிகழ்ச்சிகளில் தோன்றாமல் இருந்து வருகிறார். அவர் கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் 3–ஆம் திகதி தனது மனைவியுடன் ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.அந்த மாதக் கடைசியில் நடந்த பாராளுமன்ற கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை. இது பல்வேறு யூகங்களை கிளப்பி யிருந்தது.
அவர் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் உடல் நலமில்லாமல் இருப்பதாக அரசு டெலிவிஷன் கடந்த மாதம் செய்தி வெளியிட்டது.அவரது தொழிலாளர் கட்சியின் 69–வது ஆண்டு விழாவிலும் அவர் கலந்து கொள்ள வில்லை. இதனால் அவர் மீதான ஊகங்கள் மேலும் வலுபடுப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், நேற்றுவீட்டு திட்டம்ஒன்றிற்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வந்தார். அப்போது கையில் ஒரு பிரம்பையும் வைத்திருந்தார். அதிபர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்ததால், அவரது உடல் நிலை மற்றும் அதிகாரம் குறித்து கிளம்பிய பல்வேறு ஊகங்களை, மேற்கண்ட தகவல்  பொய்யாக்கியுள்ளது.

இது தொடர்பாக கொரியன் மத்திய செய்தி நிறுவன வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- ”செயற்கைகோள் விஞ்ஞானிகளுக்கு மொத்தமாக அரசு வீடுகள் அமைத்து கொடுக்கும் திட்டம் சமீபத்தில் நிறைவடந்ததுபியோன்யாங் பகுதியில்  உள்ள ஹவுசிங் மாவட்டத்தில் உள்ள அந்த பகுதிகளுகு வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அங்குள்ள  பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தார். அப்போது வீட்டு திட்டத்துக்கு தனது திருப்தியை வெளிப்படுத்திய அதிபர், வடகொரியா விஞ்ஞானிகளுடன் இணைந்து புகைப்படமும் எடுத்து கொண்டார்என்று செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top