கோபனி நகரை
நோக்கி முன்னேறும்
ஐ.எஸ்:
(இஸ்லாமிக் ஸ்டேட்) போராளிகளைத் தடுக்க
அமெரிக்கா ஆலோசனை
சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டு இராணுவத்தின் வான்வழித் தாக்குதலையும் மீறி, ஐஎஸ் இஸ்லாமிக் ஸ்டேட்) (இயக்கத்தின் படை கோபனி நகரில் முன்னேறி வருகிறது. அதைத் தடுத்து நிறுத்துவது தொடர்பாக இராணுவ தளபதிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது.
சிரியாவில்,
அமெரிக்கா தலைமையில்,
ஆஸ்திரேலியா, பஹ்ரைன், பெல்ஜியம், பிரிட்டன், கனடா,
டென்மார்க், எகிப்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஈராக்,
இத்தாலி, ஜோர்டான்,
குவைத், லெபனான்,
நெதர்லாந்து, நியூஸிலாந்து, கட்டார், சவூதி அரேபியா,
ஸ்பெயின், துருக்கி,
ஐக்கிய அரபு
அமீரகம் ஆகிய
நாடுகள் ஐஎஸ்
அமைப்புக்கு எதிரான கூட்டு இராணுவ நடவடிக்கையில்
தற்போது ஈடுபட்டுள்ளன.
கடந்த
மூன்று வாரங்களாக,
வான்வழித் தாக்குதல்
மூலம் ஐஎஸ்
படையினரை முன்னேற
விடாமல் தடுக்கும்
முயற்சி நடைபெற்று
வருகிறது. இருப்பினும்,
துருக்கி எல்லையில்
உள்ள கோபனி
நகரில் பாதியை
ஐஎஸ் அமைப்பு
கைப்பற்றியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதைத்
தொடர்ந்து, வாஷிங்டனில் இராணுவத் தளபதிகள் நேற்று
ஆலோசனையில் ஈடுபட்டனர். மேலும் அதிபர் ஒபாமாவிடமும்
இதுதொடர்பாக இராணுவ உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இந்த இராணுவக்
கூட்டமைப்பு உருவான பிறகு, பல்வேறு நாடுகளின்
இராணுவ உயரதிகாரிகள்
கூடி ஆலோசிப்பது
இதுவே முதல்
முறை. தற்போது
இக்கூட்டமைப்பில் 60 நாடுகள் இணைந்துள்ளன.
துருக்கி
– சிரியா எல்லையில்
இராணுவ தடுப்பு
பகுதியை ஏற்படுத்துவது
குறித்து இக்கூட்டத்தில்
விவாதிக்கப்பட்டது. இருப்பினும், இதற்கு
உறுப்பு நாடுகள்
ஒப்புதல் அளிக்கவில்லை.
‘ஐஎஸ் படைகள்
கோபன் நகரத்தின்
தெற்கு, கிழக்கு,
மேற்குப் பகுதிகளை
முற்றுகையிட்டுள்ளன. துருக்கி எல்லையிலுள்ள
வடக்குப் பகுதியைக்
கைப்பற்றினால் படுகொலை நிகழும் என அவர்கள்
எச்சரித்துள்ளனர்’, என தற்போது
அகதியாக இருக்கும்
கோபனைச் சேர்ந்த
அரசியல்வாதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
போராளிகளுக்கு எதிராக அமெரிக்க இராணுவத்தினர் விமானம் மூலம் நடத்திய குண்டு வீச்சால் எழுந்துள்ள புகை மூட்டம் |Add caption |
0 comments:
Post a Comment