யாழ்ப்பாண புகையிரத சேவையின்
நேர அட்டவணையும் கட்டண விபரமும்



யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய இடங்களுக்கு செல்லும் புகையிரத சேவையின் நேர அட்டவணையும், கட்டண விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.  
நாளை தொடக்கம் இந்த சேவைகள் தொடர்ந்து இடம்பெறும் என  புகையிரத சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை  கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்ல சராசரியாக நான்கு பிரதான ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.   முழுமையாக குளிரூட்டப்பட்ட ரயில் மற்றும் யாழ்தேவி ரயில் சேவைகள் கல்கிஸ்ஸை புகையிரத நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கவுள்ளன.  
மேலும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து கடுகதி மற்றும் இரவு நேர தபால் புகையிரத சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.   இவை யாழ்ப்பாணத்திலிருந்து  நாளாந்தம் கொழும்பு கோட்டை வரை பயணிக்கும்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை செல்ல 
சாதாரண ரயில் கட்டணமாக 320 ரூபா அறவிடப்படவுள்ளது.
முதல் வகுப்பு ஆசனங்களுக்கு 900 ரூபாவும்
இரண்டாம் வகுப்பு ஆசனங்களுக்கு 800 ரூபாவும், அறிவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளிரூட்டப்பட்ட ரயில் சேவைக் கட்டணமாக 1500 ரூபா அறவிடப்படவுள்ளது.
அதேபோல் எதிர்வரும் தினங்களில் மாத்தறையில் இருந்து யாழ்ப்பாணம் வரை, பிரதி சனிக்கிழமைகள் ரயில் சேவை இடம்பெறவுள்ளதோடு, ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை வரையிலும் ரயில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top