இந்திய முஸ்லிம்கள் யாரும் தீவிரவாதத்தில் ஈடுபடுவதில்லை
நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
‘இந்தியாவில்
தீவிரவாத பிரச்னை
இறக்குமதி செய்யப்பட்டது.
இந்தியாவில் உள்ள 15 கோடி முஸ்லிம்களில் யாரும்
தீவிரவாதத்தில் ஈடுபடுவதில்லை’’ என நார்வே தலைநகர்
ஆஸ்லோவில் இந்திய
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
நார்வே, பின்லாந்து
ஆகிய நாடுகளுக்கு
ஜனாதிபதி பிரணாப்
முகர்ஜி, 5 நாள் அரசு முறை பயணம்
மேற்கொண்டுள்ளார். முதலில் நார்வே
சென்ற ஜனாதிபதி
பிரணாப் தலைநகர்
ஆஸ்லோவில் நிருபர்களுக்கு
நேற்று பேட்டியளித்தார்.
தீவிரவாதம் பற்றி அவரிடம் நிருபர்கள் கேள்வி
எழுப்பினர். அப்போது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
கூறியிருப்பதாவது:
‘இந்தியாவில்
15 கோடி முஸ்லிம்கள்
உள்ளனர். இவர்கள்
யாரும் தீவிரவாதத்தில்
ஈடுபடுவதில்லை. ஒன்றிரண்டு பேர் தீவிரவாத செயல்களில்
ஈடுபட்டிருக்கலாம். அந்த தீவிரவாத
செயல்களும், வெளிநாடுகளில் இருந்து வந்தவை. உள்நாட்டில்
நடைபெறும் தீவிரவாத
செயல்கள் மிகச்
சிறியவை. அதுபோன்ற
அறிகுறிகள் தெரிந்தால், நாங்கள் உடனடியாக தக்க
நடவடிக்கை எடுக்கிறோம்.
தீவிரவாதத்துக்கு
எந்த கொள்கையும்
இல்லை. அவை
மதங்கள், எல்லைகளை
மதிப்பதில்லை. அதன் ஒரே கொள்கை நாசம்
செய்வதுதான். மனித உயிர்களை முற்றிலும் மதிப்பதில்லை.
தீவிரவாதிகளில் நல்லவர்கள், கெட்டவர்கள் என யாரும்
கூற முடியாது.
அவ்வாறு கூறுவது
என்னைப் பொறுத்தவரை
அர்த்தமற்றது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நடைபெறும்
தாக்குதல் குறித்து
பதில் அளிக்க
வெளியுறவுத்துறை அமைச்சர்தான் சரியான நபர். எல்லையில்
பதற்றம் குறைய
வேண்டும் என
நான் விரும்புகிறேன். இவ்வாறு
பிரணாப் கூறியிருக்கிறார்.
0 comments:
Post a Comment