ஒருநாள் போட்டியில்
இருந்து மிஸ்பா உல்–ஹக்
ஓய்வு பெற
வேண்டும்
வாசிம் அக்ரம் வற்புறுத்தல்
ஒருநாள்
போட்டியில் இருந்து கேப்டன் மிஸ்பா உல்–ஹக் ஓய்வு
பெற வேண்டும்
என்று பாகிஸ்தான்
முன்னாள் கேப்டன்
வாசிம் அக்ரம்
வற்புறுத்தி உள்ளார்.
பாகிஸ்தான்
கிரிக்கெட் அணியின் கேப்டனான மிஸ்பா உல்–ஹக் சமீபத்தில்
நடந்த இலங்கை
மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு
எதிரான போட்டிகளில்
பேட்டிங்கில் சொதப்பி ஏமாற்றம் அளித்தார். மோசமான
பார்ம் காரணமாக
அபுதாபியில் சில நாட்களுக்கு முன்பு நடந்த
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி
ஒருநாள் போட்டியில்
மிஸ்பா உல்–ஹக் அணியில்
இருந்து விலகினார்.
அத்துடன் ‘ஓட்டம்
குவிக்க தவறும் பட்சத்தில் விளையாடி
தான் ஆக
வேண்டும் என்று
சொல்ல முடியாது.
அணியும், நாடும்
தான் முக்கியம்’
என்றும் தெரிவித்து
இருந்தார்.
இதனால்
அடுத்த ஆண்டு
(2015) நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான்
அணியின் கேப்டனாக
மிஸ்பா உல்–ஹக் தொடருவாரா?
என்பதில் சந்தேகம்
நிலவி வருகிறது.
இந்த
நிலையில் பாகிஸ்தான்
கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து
வீச்சு ஜாம்பவானுமான
வாசிம் அக்ரம்
அளித்த ஒரு
பேட்டியில் கூறியிருப்பதாவது:–
களத்தில்
மிஸ்பா தைரியமாகவும்,
ஆக்ரோஷமாகவும் முடிவு எடுக்க வேண்டும். ஆனால்
அவர் அப்படி
செயல்படுவதில்லை. துணை கேப்டன் யாராவது பாகிஸ்தான்
அணியை வழிநடத்த
தயார் என்று
சொன்னால் ஒருநாள்
போட்டியில் இருந்து மிஸ்பாவுக்கு விடை கொடுக்கலாம்.
ஒருநாள் போட்டி
தொடரை வெல்ல
வாய்ப்பு உள்ள
அணியாக ஆஸ்திரேலியா
தான் இருந்தது.
தோல்விக்கு பாகிஸ்தான் அணி மீது பழி
சுமத்த முடியாது.
ஏனெனில் மற்ற
நாடுகளை விட
பாகிஸ்தான் அணி குறைவான சர்வதேச போட்டிகளில்
தான் விளையாடுகிறது.
இந்திய அணி
அதிகப்படியான போட்டிகளில் விளையாடி வருகிறது. இதேபோல்
இலங்கை அணியும்
நிறைய போட்டிகளில்
ஆடுவதால் சிறப்பாக
செயல்பட்டு வருகின்றன.
சயீத்
அஜ்மலுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் பாகிஸ்தான்
பந்து வீச்சை
வலுவிழந்து இருக்கிறது. உமர் அக்மல், உமர்
அமின், ஆசாத்
ஷபிக் போன்ற
சிறந்த வீரர்கள்
அணியில் உள்ளனர்.
ஆனால் அவர்கள்
தங்கள் தவறுகளில்
இருந்து பாடம்
கற்றுக்கொள்ளவில்லை. அத்துடன் போதுமான
தைரியத்துடன் செயல்படுவதில்லை. இளம் வீரர்களின் திறமையை
வளர்க்க 19 வயதுக்கு உட்பட்ட மற்றும் பாகிஸ்தான்
‘ஏ’ அணியினருக்கு
அதிக போட்டி
தொடர் வாய்ப்புகளை
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செய்து கொடுக்க
வேண்டும்.இவ்வாறு
வாசிம் அக்ரம்
கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment