காஸா பகுதியை சீரமைக்க
சர்வதேச நாடுகள்
நன்கொடை
Ø அமெரிக்கா 1275 கோடி
டாலர்கள்.
Ø ஐரோப்பிய யூனியன்
3700 கோடி டாலர்கள்.
Ø ஐக்கிய அரபு நாடுகள்
மற்றும் குவைத் ஆகிய 1250 கோடி டாலர்கள்.
இஸ்ரேலில்
நடந்த உள்நாட்டு
போரின் போது
சேதம் அடைந்த
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை சீரமைக்க உலக
நாடுகள் நிதி
உதவி அறிவித்துள்ளன.
இஸ்ரேல்
இராணுவத்துக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே கடந்த
ஜூலை மாதம்
முதல் கடுமையான
போர் நடந்து
வந்தது. இதில்
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி கடுமையான சேதம்
அடைந்தது. இதையடுத்து
எகிப்து தலைநகர்
கெய்ரோவில் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை சீரமைப்பது
குறித்த ஆலோசனை
கூட்டம் நடந்தது.
அதில், ஐக்கிய
நாடுகளின் பொதுச்
செயலாளர் பான்
கி மூன்,
அமெரிக்க வெளியுறவு
அமைச்சர் ஜோன்
கெர்ரி உள்ளிட்ட
30 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின்
முடிவில் காஸாவை
சீரமைக்க நிதி
உதவி அளிப்பது
என உலக
நாடுகள் தீர்மானித்தன.
இதன்படி, அமெரிக்கா
1275 கோடி டாலர்களையும் ஐரோப்பிய
யூனியன் 3700 கோடி டாலர்களையும்;, ஐக்கிய அரபு
நாடுகள் மற்றும்
குவைத் ஆகிய
1250 கோடி டாலர்களையும்
நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளன.
0 comments:
Post a Comment