போர்க்குற்றம்
வங்காள தேச ஜமாத் -இ- இஸ்லாமி தலைவருக்கு
மரண தண்டனை



வங்காளதேச நாட்டில் கடந்த 1971 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திர போராட்டத்தில் உள் நாட்டு தலைவர்களின் உதவியுடன் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள்  30 லட்சம் மக்களை கொன்று குவித்தனர்.  2 லட்சத்துக்கும் அதிகமான  பெண்களை கற்பழித்தனர்., 9 மாத போரில் 1 கோடி மக்கள் இந்திய எல்லை பகுதிகளில் உள்ள முகாம்களில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர் எனக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது

சுதந்திர போராட்டத்தின் போது போர் குற்றம் புரிந்ததாக  ஜமாத் -- இஸ்லாமி கடசியின் தலைவர் மிதியூர் நிஸாமி மீது வழக்கு தொடரப்பட்டது. அவர் மீது இனப்படுகொலை, கொலை, சித்திரவதை, கற்பழிப்பு மற்றும் சொத்துக்களை அழித்தல் உளபட 16 வழக்குகள் பதிவு செய்யபட்டது. இந்த வழக்கை விசாரித்த எம்.எனயதூர் ரஹீம் தலைமையிலான சிறப் நீதிமன்ற நீதிபதிகள்  நிஸாமிக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top