விஜய் நடித்த
”கத்தி’ திரைப்படம் வெளியிட எதிர்ப்பு
2 தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு
சென்னையில் பயங்கரம்
கத்தி
திரைப்படம் வெளியிட எதிர்ப்பு தெரிவித்து சென்னையில்
சத்யம் தியேட்டரில்
பெட்ரோல் குண்டு
வீசப்பட்டது. உட்லண்ட்ஸ் தியேட்டரில் கண்ணாடி அடித்து
நொறுக்கப்பட்டது. இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக
5 பேர் கைது
செய்யப்பட்டனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்
நடிகர் விஜய்
இரட்டை வேடத்தில்
நடித்துள்ள படம், ‘கத்தி’. சமந்தா ஹீரோயின்.
இப்படத்தை லைகா
புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.சுபாஷ்கரன், ஐங்கரன்
இன்டர்நேஷனல் சார்பில் கே.கருணாமூர்த்தி இணைந்து
தயாரித்துள்ளனர். இப்படம் தீபாவளியன்று ரிலீசாக முன்பதிவு
செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால், தொடர்ந்து
இரண்டு நாட்களாக
எந்த தியேட்டரிலும்
முன்பதிவு செய்யப்படவில்லை.
இதற்கு காரணம்,
இலங்கையை சேர்ந்த
லைகா புரொடக்ஷன்ஸ்
ஏ.சுபாஷ்கரன்,
இலங்கையில் வியாபார தொடர்பு வைத்திருக்கிறார்
என்று, இங்குள்ள
தமிழ் அமைப்புகள்
கடுமையாக எதிர்ப்பு
தெரிவித்து வருகின்றன. திட்டமிட்டபடி தீபாவளிக்கு படத்தை
திரையிட விடமாட்டோம்
என்று அந்த
அமைப்புகள் அறிவித்துள்ளன.
கடந்த
சில தினங்களுக்கு
முன்பு இந்த
படத்தின் இசை
வெளியீட்டு விழா சென்னை எம்ஆர்சி நகரில்
நடந்தபோது, தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பை சேர்ந்த
நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு
போராட்டம் நடத்தினர்.
இதனால் பரபரப்பு
ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி, அவர்கள் அனைவரையும்
பொலிஸார் கைது
செய்தனர்.இந்த
பரபரப்பான சூழலில்
படத்தை வெளியிடுவதில்
தொடர்ந்து அச்சுறுத்தல்,
மிரட்டல் இருந்து
வந்தது. இதனால்
கத்தி பட
குழுவினர் சில
தினங்களுக்கு முன்பு சென்னை மாநகர பொலிஸ்
கமிஷனர் ஜார்ஜை
சந்தித்து, ‘கத்தி திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு
முழு பாதுகாப்பு
அளிக்க வேண்டும்‘
என்று கோரிக்கை
விடுத்தனர். ‘உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்‘ என்று
பொலிஸ் தரப்பில்
உறுதியளிக்கப்பட்டது.
இந்நிலையில்
திட்டமிட்டபடி தீபாவளியன்று தமிழகம் முழுவதும் கத்தி
திரைப்படம் ரிலீஸ் செய்யப்படும் என்று தயாரிப்பாளர்கள்
தரப்பில் நேற்று
தெரிவிக்கப்பட்டது. சென்னையில் மட்டும்
30 தியேட்டர்களில் வெளியாகும் என்று
அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று
நள்ளிரவு சென்னை
அண்ணா சாலையில்
உள்ள சத்யம்
திரையரங்கம் முன்பு 4 ஆட்டோக்கள், 2 கார்கள் வேகமாக
வந்து நின்றன.
அதிலிருந்து திபுதிபுவென 30க்கும் மேற்பட்டோர் இறங்கினர்.
தயாராக வைத்திருந்த
உருட்டுக்கட்டை, இரும்பு பைப் போன்ற ஆயுதங்களால்
தியேட்டரின் முகப்பு கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
கற்களை வீசி
தாக்குதல் நடத்தினர்.
அங்கு வைக்கப்பட்டிருந்த
விஜய் பேனரை
கிழித்து எறிந்தனர்.
தியேட்டர் மற்றும்
பேனரை அலங்கரித்திருந்த
மின் விளக்குகளை
உடைத்தனர். பின்னர் திடீரென 4 பெட்ரோல் குண்டுகளை
தியேட்டர் முன்பு
வீசினர். குண்டுகள்
பயங்கர சத்தத்துடன்
வெடித்து தீப்பிடித்தது.
இந்த சம்பவத்தை
பார்த்ததும் அங்கிருந்த காவலாளிகள் அலறியடித்து ஓட்டம்
பிடித்தனர். அந்த இடமே போர்க்களம் போல
காட்சியளித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதை
அறிந்த தியேட்டர்
உரிமையாளர் மற்றும் பலர் ஓடி வந்து
பார்த்தனர். பின்னர் இதுகுறித்து அண்ணா சாலை
பொலிஸில் புகார்
செய்தனர். பொலிஸார்
சம்பவ இடத்துக்கு
விரைந்து சென்று
விசாரணை நடத்தினர்.இதற்கிடையில் இந்த
சம்பவம் நடந்து
கொண்டிருந்தபோது தியேட்டர்களில் படம் பார்த்து கொண்டிருந்த
சிலர் பீதியில்
வெளியேறினர். படம் முடிந்து வந்தவர்களும் தியேட்டரின்
பின்பக்கமாக வெளியே அனுப்பப்பட்டனர். இருப்பினும் படம்
பார்க்க தியேட்டருக்கு
கார், பைக்குகளில்
வந்தவர்கள் தியேட்டரின் முன்பக்கம் வழியாகத்தான் வெளியேற
வேண்டும். அப்படி
வந்தபோதுதான் தியேட்டரில் வன்முறை நடந்த சம்பவம்
தெரிந்தது. இதனால் பரபரப்பு அதிகமானது. தியேட்டர்
மீது தாக்குதல்
நடத்திய அதே
கும்பல்ராயப்பேட்டைக்கு சென்றது.
கத்தி திரைப்படம் திரையிட உள்ள உட்லண்ட்ஸ் தியேட்டரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிவிட்டு அந்த கும்பல் தப்பியது. இதுகுறித்த புகாரின் பேரில் ராயப்பேட்டைபொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் மாணவர் அமைப்பை சேர்ந்த 5 பேரை பிடித்து அண்ணாசாலை பொலிஸார் விசாரித்து வருகின்றனர். தியேட்டர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தீபாவளி நேரத்தில் நடந்த இச்சம்பவத்தால் சென்னை நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தியேட்டர்களுக்கு படம் பார்க்க செல்ல இருக்கும் ரசிகர்கள், பொதுமக்கள் பீதியில் உள்ளனர் எனவும் அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment