சம்மாந்துறையில் மாபெரும் தேசிய வாசிப்பு மாத நிகழ்வும்

புத்தக கண்காட்சியும்

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)

சம்மாந்துறை பிரதேச சபை நூலகங்களின் ஏற்பாட்டில், தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளை இம்மாதம் ஒக்டோபர் 24, 25, 26 ம் திகதிகளில் அமீர் அலி பொது நூலகத்தில் நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இந் நிகழ்வில் பிரதானமாக e-Paper Section திறப்பு விழாவும், விவாதப் போட்டி, அறிவுக் களஞ்சியம், சித்திரப் போட்டி போன்ற நிகழ்ச்சிகளும் சிறுவர்களுக்கான கழியாட்ட நிகழ்வுகள், திரைப்படக் காட்சி, சித்திரக் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சி, நூல் கண்காட்சியும் விற்பனையும் போன்ற நிகழ்வுகள் இடம் பெறவிருக்கின்றன.
இந் நிகழ்வானது சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் அல்-ஹாஜ் A.M.M நௌஷாட் தலைமையில் நடைபெற உள்ளது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் M.Y சலீம் மற்றும் கௌரவ அதிதிகள்  பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந் நிகழ்வில் பொது மக்களாகிய உங்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்க,  அமீர் அலி பொது நூலகம் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை அன்புடன் வரவேற்கின்றது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top