நான் இன்னும் வெற்றி பெறவில்லை
சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது

நோபல் பரிசு பெற்ற மலாலா கூறுகின்றார்


நான் இன்னும் வெற்றி பெறவில்லை நான் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. நான் தற்போது தான் சிறிய பெண் எனது வேலை இன்னும் தொடக்கத்தில் தான் உள்ளது என்று நோபல் பரிசு பெற்றுள்ள மலாலா கூறியுள்ளார்.
2014-ம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலரான 60 வயது கைலாஷ் சத்யார்த்திக்கும், 17 வயது பாகிஸ்தானிய சிறுமி மலாலாவுக்கும் கூட்டாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நோபல் பரிசை கைலாஷ் சத்யார்த்தியுடன் பகிர்ந்து கொள்ளும் மலாலா பாகிஸ்தானின் சுவாத் மாவட்டத்தில் உள்ள மின்கோரா நகரில் 1997ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் திகதி பிறந்தார். இவருடைய தந்தை ஜியாவுதீன்- தாயார் தோர் பேகை. இவருக்கு 2 தம்பிகளும் உண்டு.
மலாலா தனது 11-வது வயது முதல் பெண் குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுத்து வருபவர்.
2 ஆண்டுகளுக்கு முன்பு மின்கோரா நகரில் அவர் வசித்தபோது தலீபான் போராளிகள் பெண் குழந்தைகள் கல்வி பெறுவதை தடுக்கிறார்கள் என்று பி.பி.சி. வானொலியின் உருது சேவை நிகழ்ச்சிக்கு எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். ஒரு சிறுமி தனது நாட்டின் போராளிகளுக்கு எதிராக குரல் கொடுத்தது உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது.
இதனால் ஆத்திரமடைந்த தலீபான் போராளிகள் 2012ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் திகதி பாடசாலைக்கு மலாலா பஸ்ஸில் சென்றபோது அவரை துப்பாக்கியால் சுட்டனர். தலையில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அவர் இங்கிலாந்தின் பிரிமிங்காம் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அறுவை சிகிச்சைக்கு பின்பு உயிர் பிழைத்த மலாலா தற்போது இங்கிலாந்தில் இருந்தவாறே மலாலா அறக்கட்டளை என்னும் ஒரு தொண்டு நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் பாகிஸ்தான், நைஜீரியா, ஜோர்டான், சிரியா, கென்யா நாடுகளில் வாழும் பெண்குழந்தைகளின் கல்விக்காக சேவை செய்து வருகிறார். தற்போது இங்கிலாந்தின் பிரிமிங்காம் நகரில் வசித்து வருகிறார்.
17 வயதில் நோபல் பரிசு பெற்று இருப்பதன் மூலம், மிகக் குறைந்த வயதில் இப்பரிசை பெற்றவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகி இருக்கிறார்.
இது பற்றி மலாலா  கூறியதாவது;
உண்மையில் நான் சந்தோஷமாக இருக்கிறேன், அமைதிக்க்கான நோபல் பரிசு பெற்ற நான் பெருமை அடைகிறேன்.
தலீபான் போராளிகள் சுடபட்ட போது  ஆதரவு தந்த மக்களுக்கும் மக்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கு சமுதாயத்திற்க்கு கண்டிப்பாக என்னால் முடிந்த உதவிகளை செய்ய விரும்கிறேன் என்று கூறினார்.
நோபல் பரிசு அறிவிப்பதற்க்கு நான் வேதியல் பாடத்தில் வகுப்பில் இருந்தேன் என்னிடம்  செல்போனும் எதும் இல்லை  எனக்கு நோபல் பரிசு அறிவித்ததாக ஆசிரியர் என்னிடம் வந்து கூறினார்.அதற்க்கு ஆசிரியர் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நான் இன்னும் வெற்றி பெறவில்லை நான் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. நான் தற்போது தான் சிறிய பெண் எனது வேலை இன்னும் தொடக்கத்தில் தான் உள்ளது என்று கூறினார்.

ஆசிரியர்கள் என்னை பார்த்து மிகவும் உற்சாகம் அடைந்தார்கள் அவர்களது சிரிப்பை பார்த்து கொண்டே அடுத்த இயற்பியல் வகுப்பிற்க்கு சென்றேன் என்று மலாலா கூறியுள்ளார்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top