இனி வரும் தேர்தலை பேரம் பேசும் தேர்தலாக மாற்றுவோம் என 

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் கூறியிருப்பதன் மூலம்

கடந்த கால தேர்தல்களை சமூகத்துக்கான பேரம் பேசும் தேர்தலாக 

மாற்றாமல் முஸ்லிம்களை ஏமாற்றியுள்ளார் என்பது தெளிவாகிறது

-    உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி



இனி வரும் தேர்தலை பேரம் பேசும் தேர்தலாக மாற்றுவோம் என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் கூறியிருப்பதன் மூலம் கடந்த காலத்தில் எதிர் நோக்கிய தேர்தல்களை சமூகத்துக்கான பேரம் பேசும் தேர்தலாக மாற்றாமல் முஸ்லிம்களை ஏமாற்றியுள்ளார் என்பது தெளிவாகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார்.
இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றில் எந்தவொரு சநதர்ப்பத்திலும் சமூகத்தின் தேவைகளையும் உரிமைகளையும் முன் வைத்து அவற்றை எழுத்து மூல பேரம் பேசுதலாக பயன்படுத்தியது கிடையாது என்பதை உலமா கட்சி தெளிவாகவே சொல்லி வருகிறது. அப்படியொரு ஒப்பந்தம் இருந்தால் அதனை பகிரங்கப்படுத்திக்காட்டுங்கள் என பல வருடங்களாகவே நாம் சவால் விட்டு வருகிறோம்.
உண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்தின் வாக்குகளை பெற்று விட்டு அவற்றை வைத்து அமைச்;சு மற்றும் பதவிகள் பற்றியே வாய்மூல ஒப்பந்தங்கள் பேசியுள்ளனவே தவிர சமூகத்தேவைகளை ஒரு பொதும் பேரம் பேசு பொருளாக மாற்றியதில்லை.
மு. காவரலாற்றில் பல தீர்க்கமிக்க தேர்தல்களுக்கு முகம் கொடுத்துள்ளது. அதில் ஒன்றுதான் கிழக்கு மாகாண சபை தேர்தலாகும். இதன் போது கூட அரசுக்கு முட்டுக்கொடுப்பதற்காக அந்தக்கட்சி சமூக உரிமைகளை பேரம் பேசவில்லை. ஆகக்குறைந்தது கிழக்கில் இன்னமும் வழங்கப்படாதுள்ள சுனாமி வீடமைப்புத்திட்டம், சுனாமியால் பாதிக்கப்பட்ட மருதமுனை மக்களின் வீடில்லா பிரச்சினை, கிழக்கு மௌலவிமாருக்கான ஆசிரியர் நியமனம், புல் மோட்டை முஸ்லிம்களின் காணி பிரச்சினை, கிண்ணியா முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தடை, அஷ்ரப் கிராம அடக்குமுறை, கல்முனைக்குடி மக்களின் வீடு கட்ட காணயில்லா பிரச்சினை, அரசாங்கம் பிடித்து வைத்தள்ள பள்ளிவாயல்கள் பிரச்சினை, காரைதீவு சந்தி பள்ளிவாயல் என பல பாரிய விடயங்கள் இருந்தும் அவற்றைக்கூட பேரம் பேசாமல் பதவியே சரணம் என சரணடைந்து விட்டு பின்னர் அரசைக்குறை கூறி ஒப்பாரி வைப்பதே முஸ்லிம் காங்கிரசின் வழக்கமான ஏமாற்று அரசியலாகும்.
மக்களின் வாக்குப்பலம் இல்லாத ஒரு கட்சி தனக்குரிய சேவைகளை முன்னெடுக்க அரசியல் அதிகாரம் வேண்டி பதவிகளை பெற்று சரணாகதி அரசியல் செய்யலாம். ஆனால் சமூகத்தின் உரிமைகளை பெற்றுத்தருவோம் எனக்கூறி அதிகப்படியான வாக்குகளையும் பெற்றுவிட்டு அம்மக்களை நடுத்தெருவில் விட்டு விட்டு மீண்டுமொரு தேர்தல் வரும் போது கிழக்குக்கு படையெடுத்து மீண்டும் அப்பாவி முஸ்லிம்களின் வாக்குகளை கொள்ளையடிக்கும் திருடர் கூட்டமாகவே முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது என்பது மனச்சாட்சியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் அறிவான். அத்துடன் இந்த பகிரங்க திருடர் கூட்டத்துக்கு தொடர்ந்தும் ஏமாறும் மக்களாக கிழக்கு முஸ்லிம்கள் இருப்பதை கிண்ணஸ் சாதனையாகக்கூட பதியலாம்.

ஆகவேதான் கூறுகிறோம். எதிர் வரும் தேர்தலிலும் மு. கா, சமூக உரிமைகளை பேரம் பேசாமல் ஏதோ பேசுவது போன்று சமூகத்துக்கு பேக் காட்டுதலே நடைபெறும். அவ்வாறு சமூகத்துக்கான உரிமைகளை அக்கட்சி பேரம் பேசுவதாயின் அரசியல் ரீதியாக பெற்றுள்ள அனைத்து அமைச்சுப்பதவிகள் உட்பட அனைத்து பதவிகளையும் கைவிட வேண்டும். இல்லாத வரை அக்கட்சியினால் மீண்டும் மீண்டும் முஸ்லிம்கள் முட்டாளாகி விட்டு ஒபட்பாரி வைப்பதே தலைவிதியாக இருக்கும். தெரிந்தே தவறு செய்யும் இத்தகைய மக்களுக்கு இறைவன் கூட உதவி செய்யமாட்டான் என்பதே அல்குரிஆனின் வாக்காகும்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top