பாவம் !..
தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ்துறை கும்பகர்ணன்
தூக்கத்தில் இருந்து எப்பொழுது விழிக்கப்போகிறதோ..
(சட்டத்தரணி எஸ் முத்துமீரான்)
பாவம்
!.. தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ்துறை கும்பகர்ணன் தூக்கத்தில்
இருந்து எப்பொழுது
விழிக்கப்போகிறதோ.. இப்பல்கலைக்கழகம் உருவாக்கத்தின் நோக்கம் இப்பகுதியில் உள்ள
மக்களின் நாட்டார்
இலக்கியங்களும் அவை சார்ந்த கலை, கலாச்சார
பண்பாட்டு விழிமியங்கள்
எல்லாம் வெளிக்கொணரப்பட
வேண்டும் என்பதேயாகும்.
இதை மையமாக
வைத்தே இப்பகுதி
அரசியல்வாதிகளும், அறிஞர் பெருமக்களும்
பாடுபட்டார்கள். இதை இப்பல்கலைக்கழக உபவேந்தரும், கலைத்துறைத்
தலைவரும், மொழித்தறைத்
தலைவரும் மறந்து
தூங்குவதின் மாயம் என்ன?..
நீங்கள்
எல்லோரும் கிழக்குப்பல்கலைக்கழக
மொழித்துறைத் தலைவரோடும், நண்பர் பேராசிரியர். மௌனகுருவோடும்
கலந்து பேசி
அங்கே மட்டக்களப்பு
பிராந்திய கூத்துக்கலை
எப்படி உயிர்
பெற்று வருகின்றது.
என்பதை படித்து
அறிதல் நன்று
என்று கூறுகின்றேன்.
மேலும் சந்தியில்
பேசுவதெல்லாம் சிரிப்பைத்தான் கொண்டு வரும் என்பதை
தெ.கி.பல்கலைக்கழகம் எப்போது
அறியப்போகின்றதோ. இனியாவது பல்கலைக்கழகத்தின்
மொழித்துறையினர் இப்பகுதி அறிஞர்களையும், அனுபவமும், ஆளுமையும்
உள்ள எழுத்தாளர்களையும்,
கவிஞர்களையும் சந்தியில் எடுக்காமல் சபைக்கு எடுத்து
ஆலோசனைகளைப் பெறுமாறு கேட்கின்றேன்?...
இப்பல்கலைக்கழக
தமிழ் மொழித்துறை
மேற்சொன்ன வேண்டுதலை
ஏற்று பல
ஆய்வரங்குகளையும் அறிஞர் பெருமக்களின் ஆய்வுரைகளையும் தமிழ்ததுறையில்
நடாத்துவதற்கு முன்வருவார்களா. சீலைக்குமேல்
சொறிவதைவிட்டு, உள்ளத்தெளிவோடு பல்கலைக்கழகத்தை
வளர்க்க எப்பொழுது
முன்வருவார்கள்.
0 comments:
Post a Comment