பாக்தாத்தில்
கார் வெடி குண்டு தாக்குதலில்
முன்னாள் ஈராக் மந்திரி
உட்பட 25 பேர் பலி
பாக்தாத்தில்
ஷியா பிரிவினர் அதிக அளவு வாழும் பகுதியில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது.
இதில் ஈராக் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட 25 பேர் பலியானார்கள். ஷியாமுஸ்லீம்களின்
புனித ஸ்தலமாக கருதப்படும் இமாம் காதிம் பகுதியில்
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாக அறிவிக்கப்படுகின்றது.
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள்
பெரும்பாலான நகரங்களை
பிடித்து ஆதிக்கம்
செலுத்தி வருகின்றனர்.
தற்போது அன்பர்
மாகாணத்தில் முற்றுகையிட்டு நகரங்களை கைப்பற்றியும் வருகின்றனர்.
சமீபத்தில் இயூபிரேட்ஸ் ஆற்றின் கரையில் உள்ள
ஹீத் என்ற
நகரத்தை போராளிகள்
கைப்பற்றினர்.
போராளிகளுக்கு
ஈராக் இராணுவம் பதிலடி கொடுக்கும் வகையில் அங்
குள்ள ஆசாத்
முகாமில் தங்கியிருந்து தாக்குதல்
நடத்தியது. ஆனால் போராளிகளின் தாக்குதலுக்கு இராணுவத்தால்
ஈடுகொடுக்க முடியவில்லை என அறிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையே
ஹீத் நகரின்
மைய பகுதியை
போராளிகள் ஆக்கிரமித்
தனர். எனவே
ஹீத் நகரை
போராளிகளுக்கு ஈராக் இராணுவம் விட்டுக் கொடுத்து
தாரை வார்த்தது.ஆசாத் முகாமில்
இருந்து வெளியேறி
வேறு இடத்துக்கு
சென்று விட்டது.
ஆசாத் முகாம்
வடமேற்கு ஹீத்
பகுதியில் உள்ள
மிகப் பெரிய
முகாம் அது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஈராக்கில்
மேற்கு அன்பார்
மாகாணத்தை பிடிப்பதற்காக
ஐ.எஸ்.
போராளிகள் அரசு படைகளுடன் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர்.
இதனால் அங்கிருந்து 1 லட்சத்து 80 ஆயிரம்
மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்
கடந்த
3 நாட்களுக்கு முன் ஈராக்கின் ஷியா பிரிவினர்
அதிகமாக வாழும்
காதிமியா மார்க்கெட்
பகுதியில் நடந்த
3 மனித வெடிகுண்டு
தாக்குதல்களில் 77 பேர் கொல்லபட்டனர்.இந்த நிலையில்
நேற்று பாக்தாத்தில்
ஷியா பிரிவினர்
அதிக அளவு
வாழும் பகுதியில்
கார் வெடிகுண்டு
தாக்குதல் நடைபெற்றது.
இதில் ஈராக்
பாராளுமன்ற உறுப்பினர் உட்பட 25 பேர் பலியானார்கள்.
ஷியாமுஸ்லீம்களின் புனித ஸ்தலமாக
கருதப்படும் இமாம் காதிம் பகுதியில்
குண்டு வெடிப்பு
நிகழ்ந்தது.
இதில்
முன்னாள் துணை
உள்துறை அமைச்சரும்
ஷியா பத்ர்
அரசியல் கட்சியின்
பாராளுமன்ற உறுப்பினருமான அஹ்மத் -அல்- ஹபாஜியும்
பலியானார் என
பொலிஸார் தெரிவித்து
உள்ளனர். மேலும்
இந்த தாக்குதலில்
5 பொலிஸாரும் கொல்லபட்டு உள்ளனர்.
இரண்டாவது
தாக்குதல் வடக்கு
பாக்தாத் அல்
குகிரா மாவட்டத்தில்
மக்கள் நடமாட்டம்
அதிகம் உள்ள
பகுதியில் சாலையோரம்
குண்டு வெடித்தது.
இதில் 3 பேர் பலியானார்கள்.
.
0 comments:
Post a Comment